Jawan Movie Review : ஜவான் படத்தின் திரைவிமர்சனம்
நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் (Jawan Movie Review) தற்போது படத்தின் விமர்சனத்தை காணலாம்.
இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லீ, தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார். குறிப்பாக நடிகர் விஜய்யை வைத்து தொடர்ந்து 3 படங்களை இயக்கியதன் விளைவுதான் அவர் இந்தி சினிமாவில் அடியெடுத்து வைக்க காரணமாக அமைந்தது. இந்தி திரையுலகில் இயக்குநராக அறிமுகமான அட்லீ, பாலிவுட் பாட்ஷா என்று கொண்டாடப்படும் நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். ரெட் சில்லி சார்பில் ஷாருக்கானின் மனைவி கௌரி கான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ஜவான் படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், விஜய் சேதிபதி வில்லனாகவும் நடித்துள்ளனர். தீபிகா படுகோனே, பிரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ள ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
Jawan Movie Review :
முன்னதாக, படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், எங்கு பார்த்தாலும் ஜவான் படத்தின் போஸ்டர், பேனர்கள் என கொண்டாட்டங்கள் களைகட்டியது. ஜவானுக்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடந்து பல சாதனைகளை படைத்தது. ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ஜவான் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜவான் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் காலை 6 மணிக்கு முதல் ஷோ தொடங்கிய நிலையில் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் படம் குறித்த விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த படத்தில் நடித்த நடிகர் விஜய் சேதுபதியும், நயன்தாராவும் நடிப்பில் மிரட்டல் விடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறியதால் தமிழ் சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Jawan Movie Review : ஜவான் திரைப்படம் அருமையாக உள்ளது. ஷாருக்கான் ஒரு மாஸ்டர் பீஸ் படத்தை கொடுத்துள்ளார். ஜவான் மாஸ் காட்சிகள் நிறைந்த படமாக இருக்கிறது. விஜய் சேதுபதியின் நடிப்பு நன்றாக உள்ளது. அனிருத்தின் பின்னணி இசை திரையரங்குகளை அதிர வைத்துள்ளது. இயக்குனர் அட்லி தரமான கம்பேக் கொடுத்துள்ளார். ஜவான் முதல் பாதி சூப்பராக உள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சிகள் அனல் பறக்கிறது. இரண்டாம் பாதி முழுக்க கூஸ்பம்ப்ஸ் தான். ஷாருக்கானின் ஃப்ளாஷ்பேக் வேற லெவல். நயன்தாரா நடிப்பு வேறலெவலில் உள்ளது. ஆகா மொத்தம் ஜவான் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை (Jawan Movie Review) தெரிவித்து வருகின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!