July-September Home Sales Fell 11 Percent : ஜூலை - செப்டம்பர் காலாண்டுகளில் வீடு விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது
ரியல் எஸ்டேட் ஆலோசகர் அனுஜ் பூரி அவர்கள் வெளியிட்ட தரவுகளின்படி ஜூலை – செப்டம்பர் காலாண்டுகளில் வீடு விற்பனையானது 11 சதவீதம் சரிந்து 1,20,290 யூனிட்களில் இருந்து 1,07,060 யூனிட்களாக உள்ளது (July-September Home Sales Fell 11 Percent) என தெரிவித்துள்ளார். இதுபற்றி ரியல் எஸ்டேட் ஆலோசகர் அனுஜ் பூரி கூறுகையில் இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி நகரங்களும் வீட்டு விற்பனையில் சரிவை பதிவு செய்துள்ளன என தெரிவித்தார். ஜூலை-செப்டம்பர் 2024 இல் வீடு விற்பனையானது 93,750 யூனிட்கள் தொடங்கப்பட்டன, ஆனால் 2023 ஆம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1,16,220 யூனிட்களாக இருந்தது.
2024-ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அதிக விலை மற்றும் பருவமழை காரணமாக வீட்டு விற்பனை குறைந்துள்ளதாக திரு.அனுஜ் பூரி அவர்கள் கூறியுள்ளார். இந்த காலகட்டத்தில் எப்பொழுதும் போல இந்தியர்கள் வீடு வாங்குவதை ஒத்திவைப்பதால் ஜனவரி-மார்ச் 2024-ல் புதிய உச்சத்தை உருவாக்கிய பிறகு வீட்டுச் சந்தை நிலையாக வருவதாகவும் கூறினார். பண்டிகை காலமான அக்டோபர்-டிசம்பர் மாதங்களில் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். இதனால் சந்தையில் தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர்-டிசம்பர் காலாண்டுகளில் (வீடு விற்பனை) வளர்ச்சி கடந்த 1-2 ஆண்டுகளில் காணப்பட்டதைப் போல இருக்காது என்றும் அனுஜ் பூரி தெரிவித்துள்ளார்.
July-September Home Sales Fell 11 Percent - வீடு விற்பனை சரிந்துள்ள 7 நகரங்கள் :
- புனே நகரங்களில் வீடு விற்பனை 22,885 யூனிட்களில் இருந்து 19,050 யூனிட்களாக விற்பனையாகி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சுமார் 17 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
- தொழில்நுட்ப நகரமான பெங்களூருவில் 16,395 யூனிட்களில் இருந்து 15,025 யூனிட்கள் வீடு விற்பனையாகி சுமார் 8 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
- ஹைதராபாத் நகரம் 16,375 யூனிட்களில் இருந்து 12,735 யூனிட்கள் வீடு விற்பனையாகி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 22 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
- கொல்கத்தாவில் 5,320 யூனிட்களில் இருந்து 3,980 யூனிட்கள் வீடு விற்பனையாகி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சுமார் 25 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளது.
- சென்னையில் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வீடு விற்பனை சுமார் 9 சதவீதம் வரை சரிந்து 4510 யூனிட்களாக உள்ளது.
- மும்பை பகுதியில் ஜூலை-செப்டம்பர் காலாண்டுகளில் வீடு விற்பனையானது 36,190 யூனிட்களை பதிவு செய்துள்ளது. இருப்பினும் கடந்த 2023 ஆண்டு இதே காலகட்டத்தில் 38,505 யூனிட்களில் இருந்து சுமார் 6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
- இந்தியாவின் தலைநகர் டெல்லியில் 15,865 யூனிட்களில் இருந்து 15,570 யூனிட்கள் வீடு விற்பனையாகி ஜூலை-செப்டம்பர் காலாண்டில் 2 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!