-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
Kaantha Movie Box Office : 2 நாட்களில் காந்தா படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ, சமுத்திரகனி மற்றும் ராணா டகுபதி (Kaantha Movie Box Office) ஆகியோர் நடிப்பில் உருவான காந்தா படம் ஆனது கடந்த வெள்ளி (13.11.2025) அன்று வெளியானது.
திரைக்கதை 1950 காலகட்டத்தைச் சார்ந்தது
இந்தப் படம் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரின் திரையுலக வாழ்க்கையில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ் சினிமாவின் 1950 காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர். ரசிகர்களை கவரும் கமர்சியல் விசயங்கள் படத்தில் குறைவாகவே இருப்பதால் இந்தப் படம் ரசிகர்களை எப்படி கவரும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் ரசிகர்களிடையே துல்கர் சல்மான் நல்ல அபிப்பிராயம் பெற்றவர்
மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியிடப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஆனது கிடைத்து வருகிறது. மலையாளத் திரையுலகின் சிறந்த நடிகரான மம்முட்டியின் மகனான நட்சத்திர நாயகன் துல்கர் சல்மானுக்கு (Kaantha Movie Box Office) கேரளாவில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் ரசிகர்கள் உள்ளனர். துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் தமிழில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. மேலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு அபிப்பிராயத்தை பெற்றது.
துல்கர் சல்மான் ஒரு தயாரிப்பாளராகவும் மிளிர்கிறார் (Kaantha Movie Box Office)
நடிகர் துல்கர் சல்மான் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். துல்கர் சல்மான் தயாரித்து வெளியான லோகா திரைப்படம் ஆனது மலையாள சினிமா உலகில் ஒரு பெரிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வசூலிலும் சாதனை படைத்து உள்ளது. இதன் மூலம் துல்கர் சல்மான் தன்னை ஒரு தயாரிப்பாளராகவும் நிலைநிறுத்தி வருகிறார்.
காந்தா படத்தின் முன் பதிவின் சாதனை
காந்தா படம் திரைக்கு வரும் முன்பே முன்பதிவில் மட்டுமே உலகளவில் ரூ.2.87 கோடி வசூல் சாதனை செய்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸில் காந்தா படத்தின் வசூல் சாதனை
உலகளவில் உள்ள மக்கள் மத்தியில் காந்தா படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டுமே உலகளவில் இப்படம் ஆனது ரூ. 20+ கோடி வசூல் செய்துள்ளது. இனிவரும் நாட்களில் (Kaantha Movie Box Office) இந்தப் படத்தின் வசூல் ஆனது இன்னும் கணிசமாக உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் காந்தா திரைப்படத்திற்கு இதுவரை ஒரு பெரிய ஆதரவை கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Latest Slideshows
-
IDBI Bank Jobs : ஐடிஐபி வங்கியில் 1,300 அசிஸ்டண்ட் மேனேஜர் பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க.!
-
T20 World Cup India Champion : டி20 உலகக் கோப்பை.. நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா சாம்பியன்.!
-
Avataar Drone : வானில் கழுகு, நீரில் மீன்.. இந்தியாவின் முதல் நீர்-நில ட்ரோன் 'அவதார்' பற்றித் தெரியுமா?
-
Lemon Honey Water Benefits : காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!
-
Vadam Movie Review : ஈகோ, காதல், துரோகம்.. என விறுவிறுப்பாக இருக்கிறதா வடம்?
-
India vs New Zealand T20 : டி20 உலகக் கோப்பை.. இந்தியா- நியூசிலாந்து பலப்பரீட்சை! சாதனை படைக்குமா இந்திய அணி?
-
Signs of Diabetes : நீரிழிவு நோயின் 10 ஆரம்ப கால அறிகுறிகள் என்ன?
-
Toxic Movie Release Date : போர் பதற்றம் காரணமாக ‘டாக்ஸிக்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்?
-
Women's Day 2026 : சர்வதேச மகளிர் தினம்.. வரலாறு, முக்கியத்துவம் & கொண்டாட்டம்.!
-
T20 World Cup Semi Final : டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா.. இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்.!