Kalaignar Magalir Urimai Thogai Reapply : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற ஜூன் 4-ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசு பெண்களுக்கு ‘விடியல் பயணம்’ என்ற பெயரில் இலவச பேருந்து பயணத்தை கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் 21 வயது நிரம்பிய தகுதியுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. வரும் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (Kalaignar Magalir Urimai Thogai Reapply) மாற்றங்கள் வரவுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
மகளிர் உரிமை தொகை தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது . இந்த திட்டம் மறைந்த முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நினைவாக ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என பெயரிட்டு, கடந்த 2023 ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கிவைத்தார்.
ஜூன் 4-ம் தேதி முதல் மீண்டும் விண்ணப்பிக்கலாம் (Kalaignar Magalir Urimai Thogai Reapply)
இந்த மகளிர் உரிமை திட்டத்தில் சுமார் 1.14 கோடி மகளிர் பயனடைந்து வருகிறார்கள். மேலும் இந்த திட்டம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கலைஞர் மகளிர் உதவித் தொகை பெறாதவர்கள் தகுதியிருப்பின் வரும் ஜூன் 4-ம் தேதி முதல் நடைபெறும் 9 ஆயிரம் முகாம்களின் மூலம் மீண்டும் (Kalaignar Magalir Urimai Thogai Reapply) விண்ணப்பிக்கலாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு, அன்றே பூர்த்தி செய்யப்பட்டு பெண்களிடம் இருந்து பெறப்படுகிறது. அவற்றின் மீது பரிசீலனை நடத்தி தகுதியான பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மீண்டும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு போதுமான சில ஆவணங்கள் இல்லாததால் சில மகளிருக்கு பணம் வழங்கப்படவில்லை. தற்போதைய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குடும்பத் தலைவி இல்லாத பெண்களுக்கும் (Kalaignar Magalir Urimai Thogai Reapply) வழங்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வீட்டில் குடும்ப தலைவியான தாய் இல்லாமல் தந்தை, மகன் மற்றும் இரு மகள்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களில் ஒருவருக்கு 21 வயது நிறைவடைந்திருப்பின் தகுதியான ஆவணங்களை சமர்ப்பித்து மீண்டும் விண்ணப்பித்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் தனி ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!