கடந்த 2019-ல் வெளியாகி வெற்றி பெற்ற காளிதாஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ‘காளிதாஸ் 2’ திரைப்படம் ஆகும். (Kalidass 2 Movie Review) இந்த காளிதாஸ் 2 திரைப்படமானது ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், நடிகர் பரத் நடிப்பில் விறுவிறுப்பும் சஸ்பென்ஸும் கலந்த ஒரு தரமான போலீஸ் திரில்லர் திரைப்படமாக வெளியாகியுள்ளது.
கலைஞர்களின் பட்டியல்
இத்திரைப்படத்தில் பரத், அஜய்கார்த்தி, அனந்த் நாக், சங்கீதா, பவானிஸ்ரீ, அபர்ணதி, பிரகாஷ்ராஜ் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். ஸ்ரீ செந்தில் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை சுரேஷ் பாலாவும் மற்றும் இசையமைப்பை சாம்.சி.எஸ் செய்துள்ளனர். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பை செய்துள்ளார்.
Kalidass 2 Movie Review : காளிதாஸ் 2 படத்தின் திரைக்கதைச் சுருக்கம்
சென்னை புறநகரின் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அபர்ணதி (சஞ்சு) – அனந்த் நாக் தம்பதியின் 4 வயது மகள் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது காணாமல் போகிறாள். இன்ஸ்பெக்டர் காளிதாஸ் (பரத்) மற்றும் அசிஸ்டன்ட் கமிஷனர் வைஷ்ணவி (பவானி ஸ்ரீ) தலைமையிலான குழு அபர்ணதி (சஞ்சு) – அனந்த் நாக் தம்பதியின் 4 வயது மகள் காணாமல் போன வழக்கை விசாரிக்க களமிறங்குகிறது. அதே குடியிருப்பில் வசிக்கும் வழக்கறிஞர் அஜய் கார்த்தி (ஸ்டீபன்) மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசார் அவரை கைது செய்கின்றனர். மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ராஜ் முறையான ஆதாரங்கள் இல்லாததை சுட்டிக் காட்டி அஜய் கார்த்தியை விடுவிக்கிறார். விசாரணை தொடரும் கால கட்டத்திலே காணாமல் போன குழந்தை சடலமாக மீட்கப்படுகிறது. மேலும் ஒரு சிறுமி அதே குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழக்கிறாள். இந்தத் தொடர் கொலைகளுக்குப் பின்னணி என்ன? மற்றும் பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை விறுவிறுப்பாக திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
கலைஞர்கள் தங்களது கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்துள்ளனர்
காளிதாஸ் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிகர் பரத் தேவையற்ற அலட்டல்கள் இல்லாமல் மிகவும் முதிர்ச்சியான மற்றும் நிதானமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கம்பீரமான அதிகாரியாகத் தோன்றத்தில் பவானி ஸ்ரீ அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு குடியிருப்பின் செயலாளர் ரூபா சுந்தரியாக நடிகை சங்கீதா இத்திரைப்படத்தில் நடித்துள்ளார். (Kalidass 2 Movie Review) நடிகர் அஜய் கார்த்தி தனது அமைதியான தோற்றத்தாலும் மற்றும் கண்களால் பேசும் நடிப்பாலும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறார். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை அனந்த் நாக், பிரகாஷ் ராஜ், அபர்ணதி, மற்றும் கிஷோர் ஆகியோர் சிறப்பாகச் செய்துள்ளனர்.
காளிதாஸ் 2 ரசிகர்களை கவரும் வகையில் உருவாகியுள்ளது
ஒரு தரமான போலீஸ் திரில்லர் திரைப்படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு காளிதாஸ் 2 விறுவிறுப்பான திரைக்கதை, சஸ்பென்ஸ் மற்றும் கிரைம் திரில்லர் நிறைந்த திரைப்படமாக அமைந்துள்ளது. சில விமர்சகர்கள் 2019-ல் வந்த முதல் பாகத்துடன் ஒப்பிட்டு இரண்டாம் பாகத்தில் விறுவிறுப்பு சற்று குறைவாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர். எளிதில் கணிக்கக்கூடிய வகையில் பல காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள யதார்த்தமான காவல்துறையின் விசாரணை முறைகள் அனைவரும் பாராட்டும் விதத்தில் உள்ளது. இத்திரைப்படத்தின் சிறந்த பலமாக கிளைமாக்ஸில் வரும் எதிர்பாராத திருப்பம் அமைந்துள்ளது.