'Kalki 2898 AD' Trailer Release Date : 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள “கல்கி 2898 ஏடி” திரைப்படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை (‘Kalki 2898 AD’ Trailer Release Date) படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார்.
கல்கி திரைப்படம் இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி வரும் கல்கியில் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் கதாபாத்திரங்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. ஏற்கனவே பாகுபலி படத்திற்கு பிறகு தொடர் தோல்வியால் தவித்து வரும் பிரபாஸுக்கு இந்த படமாவது கைகொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டிக்கொண்டுள்ளனர். ரூ.600 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட கல்கி 2898 ஏடி படம் மே மாதம் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை நடந்ததால் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டது. அதன்படி இப்படம் இந்த மாதம் 27 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தின் ரிலீஸ் ('Kalki 2898 AD' Trailer Release Date)
மகாபாரதக் கதையும், விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கியையும் கலந்து கற்பனைக் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும், படத்தில் முக்கிய வேடத்தில் கார் ஒன்று நடித்துள்ளது. இந்த கார் பல்வேறு நகரங்களில் வலம் வந்து ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்த காரை சென்னையில் செயல்படும் மஹிந்திரா குழுமத்தின் ஆராய்ச்சி மையமும், கோவையில் செயல்படும் ஜெயம் ஆட்டோமோட்டிவ் என்ற நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கல்கி 2898 ஏடி படத்தின் ட்ரெய்லர் ஜூன் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!