Kambu Benefits in Tamil: கம்பு நன்மைகள், தீமைகள் மற்றும் மருத்துவ குணங்கள்
அரிசி, கோதுமை ஆகிய இரண்டும் தான் உலகில் அதிக மக்களால் உண்ணப்படும் தானியங்கள் ஆகும். இந்த தானியங்களை போலவே கம்பு பல சத்துக்களை கொண்ட தானியமாக உள்ளது. கம்பு பொதுவாக ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றியதாக கருதப்படுகிறது. பின்னர் இது ஆசிய நாடுகள் மற்றும் அமெரிக்க நாடுகளில் பரவி இன்று 40க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுப் பொருளாக வளர்க்கப்படுகிறது. குறிப்பாக ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மொத்த சிறு தானிய உற்பத்தியில் கம்பு 55% உள்ளது.
கம்பில் உள்ள சத்துக்கள்
சிறு தானியங்களிலேயே கம்பில்தான் புரோட்டீன் அதிக அளவாக 11.8 சதவீதம் உள்ளது. மேலும் கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், வைட்டமின் B, ரைபோபிளேவின் மற்றும் உடலுக்கு அத்தியாவசியமான கொழுப்பு அமிலம் ஆகிய சத்துக்கள் கம்பில் நிறைந்துள்ளது.
100 கிராம் கம்பில் உள்ள விட்டமின்கள்
100 கிராம் கம்பில் உள்ள மினரல்கள்
Kambu Benefits in Tamil - கம்பு நன்மைகள்
இதய ஆரோக்கியம்
கம்பில் இருக்கும் நார்ச்சத்து உடலில் உள்ள கொழுப்பை குறைக்கவும் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த தானியத்தில் கொழுப்பு குறைவாக உள்ளது மற்றும் ஆரோக்கியமற்ற டிரான்ஸ் கொழுப்புகள் இல்லை, இது இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுத் தேர்வாக அமைகிறது. மேலும் கம்புகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளில் இருந்து மெதுவாக வெளியிடும் ஆற்றல் இரத்த சர்க்கரை அளவை நிர்வகிப்பதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது, குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த உணவாக அமைகிறது.
செரிமானம் அடைய
நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் எளிதில் ஜீரணமாக வேண்டும். கம்புகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமானக் கோளாறு மற்றும் வயிற்றில் புண்கள் உள்ளவர்கள் தொடர்ந்து சிறிது காலம் சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான அனைத்து குறைபாடுகளும் நீங்கும்.
உடல் எடை குறைய
கம்பில் அதிகமாக நார்ச்சத்தும் மற்றும் குறைந்த அளவு கொழுப்பு இருப்பதால், இந்தக் கம்பங்கூழைக் குடித்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, உடல் எடை குறையும். எனவே, உடல் பருமனை குறைக்க ஆசைப்படுவோர் கம்பால் செய்யப்பட்ட உணவை தினமும் சாப்பிட்டு வரலாம்.
மாதவிடாய் பிரச்சனைக்கு
பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலங்களில் அதிகமான இரத்தப்போக்கு மற்றும் அடி வயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோன்ற நேரங்களில் கம்பு கூழ் அல்லது கம்பு சூப் குடித்து வந்தால் மேற்கண்ட பிரச்சனைகள் தீரும்.
இளமை தோற்றம் நீடிக்க
கம்பு அதிகம் உட்கொள்பவர்களின் இரத்தத்தில் இருக்கும் செல்கள் ஆக்ஸிஜன் உறிஞ்சுவதை அதிகப்படுத்துவதால், அவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மேலும் தோல் பளபளப்பாக இருக்க உறுதி செய்கிறது. மேலும் முதுமை அடைவதை தாமதப்படுத்துகிறது.
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கல் என்பது இன்றைய காலத்தில் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களின் விளைவாக மிக மோசமான பிரச்சனையாக கருதப்படுகிறது. கம்பில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால், இதனை உண்டு வரும்போது மலச்சிக்கல் பிரச்சனை வராமல் முற்றிலும் தடுக்கப்படுகிறது.
உடலுக்கு குளிர்ச்சி அளிக்க
இன்றைய நவீன யுகத்தில் வேலையாலும், உணவுப்பழக்கத்தாலும் உடல் சூடு பிரச்சனையால் அனைவரும் அவதிப்படுகின்றனர். அதிகபடியான உடல் சூட்டின் காரணமாக பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு கம்பு கூழ் குடித்து வந்தால் உடல் சூடு தணியும். இதனால் உடல் குளிர்ச்சி அடையும்.
சர்க்கரை நோயை தடுக்க
கம்பில் அதிகளவு நார்ச்சத்தும் மற்றும் குறைந்த அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் இருப்பதால், இதை சாப்பிட்டால் சர்க்கரை நோய் ஏற்படாமல் தடுக்க உதவும். எனவே கம்பு உணவை தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயை தடுக்கலாம்.
குடல் புற்று நோயை தடுக்க
குடல் புற்றுநோய் மனிதர்களுக்கு ஏற்படும் பல புற்றுநோய்களில் ஒன்றாகும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது கம்பு உணவுகளை உட்கொள்பவர்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் தடுக்கப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு பல்வேறு விதமான நோய்களுக்கு மருந்தாக இருக்கக்கூடிய கம்பை தினமும் சாப்பிட்டு வருவதால் உடலுக்கு நல்ல ஆற்றலை வழங்குகிறது.
கம்பின் தீமைகள்
கம்பு பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது மற்றும் பொதுவாக எந்த தீவிர பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும், இருந்தாலும் மற்ற உணவுகளை போலவே, கம்பு சிலருக்கு குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். தற்போது அந்த பக்க விளைவுகளை காணலாம்.
கம்பில் நார்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. இது சிலருக்கு வீக்கம், செரிமான பிரச்சனை, வாயு பிரச்சனை மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும், குறிப்பாக அதிக அளவில் உட்கொண்டால். செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க, நார்ச்சத்து உட்கொள்ளலை படிப்படியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
கம்பில் பைடிக் அமிலம் உள்ளது, இது உடலில் உள்ள சில தாதுக்களுடன் பிணைக்கப்பட்டு அவற்றின் உறிஞ்சுதலைத் தடுக்கிறது. காம்பை சரியாக சமைக்கவிட்டால் அதில் உள்ள ஆக்சலேட்டு எனும் பொருள் சிறுநீரக கற்களை உருவாக்கும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே உடலில் பிரச்சனைகள் இருந்தால் கம்பு உட்கொள்வதை குறைத்துக்கொள்வது நல்லது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!