Gistak Media

Kantara Chapter 1 Review : ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா சாப்டர் 1' திரை விமர்சனம்

ரிஷப் ஷெட்டியின் இயக்கம் மற்றும் நடிப்பில் கன்னட மொழியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் உருவான ‘காந்தாரா’ படத்தைப் பார்த்து வியந்த ரசிகர்கள், ‘காந்தாரா சாப்டர் 1’ படத்திற்காக ஆவலுடன் காத்திருந்தனர். இன்று அக்டோபர் 2-ம் தேதி பான் இந்திய அளவில் காந்தாரா படம் வெளியாகியுள்ள (Kantara Chapter 1 Review) நிலையில், படம் எப்படி இருக்கிறது என்ற சமூக வலைதள விமர்சனத்தை பார்க்கலாம்.

காந்தாரா சாப்டர் 1 கதை

பஞ்சுருளி வேடமிட்டு நடனமாடும் தனது அப்பா ஏன்? இந்த இடத்தில் மறைந்தார் என சிறுவன் கேட்கும் இடத்தில் தொடங்கி காந்தாரா முதல் பாக கனெக்‌ஷனை ஆரம்பித்து அப்படியே காந்தாராவின் புராண கதையை நோக்கி படம் நகர்கிறது. அந்தக் காலத்தில் கர்நாடகாவின் தெற்குப் பகுதியில் அடர்ந்த காடுகளில் மூன்று பழங்குடியினத்தை சேர்ந்த மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் ‘காந்தாரா‘ பழங்குடியினர் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களின் தலைவனான பர்மே (ரிஷப் ஷெட்டி) தெய்வீக சக்தி கொண்டவராக இருக்கிறார். அந்த தெய்வத்தையும், காட்டையும் தங்கள் வசப்படுத்த ‘பிஞ்சர்லா பழங்குடியினர்’ முயற்சி செய்கின்றனர், ஆனால் அவர்களின் முயற்சியை காந்தாரா பழங்குடியினர் முறியடிக்கின்றனர். 

மறுபுறம், காந்தாரா காட்டிலுள்ள வாசனை திரவியங்களை கொள்ளையடித்து, வியாபாரம் செய்யும் பேராசையுடன் பங்ரா ராஜ்ஜியத்தின் மன்னன் விஜயேந்திரன் (ஜெயராம்) காந்தாரா காட்டுக்குள் தனது குழந்தையுடன் செல்கிறார். ஆனால் தெய்வம் அவனைக் கொன்றுவிடுகிறது. தந்தையின் (Kantara Chapter 1 Review) மரணத்தை இளவரசன் ராஜசேகரன் (ஜெயராம்) நேரில் பார்க்கிறான். பிறகு அவன் வளர்ந்து பங்ரா ராஜ்ஜியத்தை ஆள்கிறான். அவனுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறக்கிறது. 

தான் நன்றாக இருக்கும் போதே ராஜசேகரன், பங்ரா ராஜ்ஜியப் பொறுப்புகளை மகன் குலசேகரனிடம் (குல்ஷன் தேவைய்யா) ஒப்படைக்கிறார். ஆனால் அவன் சரியாக ஆட்சி செய்யாமல், எப்போதும் போதையில் மூழ்கியிருக்கிறான். இதனால் ராஜசேகரனும், அவரது மகள் கனகவதியுமே (ருக்மிணி வசந்த்) ராஜ்ஜியப் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்துக் கொண்டு வரும்போது, காந்தாரா காட்டிலுள்ள சிவபூந்தோட்டம் மீது அவர்களின் கவனம் திரும்புகிறது. ஆனால் அக்காட்டுக்குள் சென்றால் மீண்டும் வெளியே வர முடியாது, பிழைக்க முடியாது என ஊர் மக்கள் கூற அதற்குள் செல்ல வேண்டும் என்று கனகவதியும், மன்னன் குலசேகரனும் நினைக்கிறார்கள். 

இந்நிலையில் ஒருமுறை அக்காட்டுக்குள் செல்ல மன்னன் குலசேகரன் முயற்சிக்கும்போது, தெய்வம் அவனை வேட்டையாடுகிறது. ஆனால் காந்தாரா மக்கள் அவர்களை விரட்டியடிக்கும்போது, அதில் ஒரு வீரன் அவர்களிடம் பிடிபடுகிறான். அவன் உதவியுடன் பர்மேவும் (ரிஷப் ஷெட்டி), அவனது சகாக்களும் பங்ரா ராஜ்ஜியத்திற்குள் நுழைகிறார்கள். காந்தாரா ஆட்கள் நம் ராஜ்ஜியத்துக்கள் நுழைந்த விட்டதை அறிந்துக் கொண்டு குலசேகரன் தனது படைபலத்துடன் காந்தாரா காட்டுக்குள் (Kantara Chapter 1 Review) சென்று மக்களை அழிக்க ஹீரோ தெய்வ சக்தியின் துணையோடு இந்த குலசேகரனை எதிர்த்தாரா? இல்லையா? காந்தாராவை காவல் காக்கும் சிவனுக்கும், தீய சக்திக்கும் இடையேயான போர் எப்படி முடிகிறது என்பது தான் இந்த காந்தாரா படத்தின் மீதி கதை.

படம் எப்படி இருக்கு? (Kantara Chapter 1 Review)

Kantara Chapter 1 Review - Gistakmedia

ரிஷப் ஷெட்டி ஊருக்குள் வந்து ஹீரோயினை சந்திக்கும் காட்சியில் இடம் பெறும் தேர் சீன் மற்றும் அதே பாணியில் வரும் குதிரை சீன் அனல் பறக்கிறது. காந்தாரா காட்டை பார்த்து பயப்படும் ஜெயராம் (குலசேகரன்) கிளைமேக்ஸில் எடுக்கும் அவதாரம், யாருமே எதிர்பாராத வில்லனுடைய ட்விஸ்ட் காட்சிகள் கச்சிதமாக உள்ளது. காந்தாரா மக்களை கடவுள் காப்பார் என நம்புவதும், அரசாட்சியில் இருப்பவர்கள் (Kantara Chapter 1 Review) செய்யும் சூழ்ச்சிகளும் என கடைசி வரை படம் ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்கிறது. படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரிஷப் ஷெட்டியின் ‘மகாகாளி தேவி’ நடிப்பு பிரம்மிப்பின் உச்சத்திற்கு செல்கிறது. காந்தாரா படத்திற்கு ரசிகர்கள் எதை எதிர்பார்த்து வருவார்களோ அவர்களை திருப்தி செய்ய அதற்கு மேல் கொடுக்கிறேன் என இப்படியொரு மொரட்டு ப்ரீக்வெல்லை கொடுத்த ரிஷப் ஷெட்டிக்கு தேசிய விருதே கொடுக்கலாம். ஒட்டுமொத்தமாக காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், கர்நாடகாவின் ‘பாகுபலி’ என்றும் பாகுபலி படத்துக்குப் பிறகு இப்படியொரு பிரம்மாண்ட இந்திய படைப்பு என்றே சொல்லலாம்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top