Kantara Chapter 1 Trailer : காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது
ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் காந்தாரா படம், ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் கதையை எழுதி இயக்கி, நடித்திருந்தார் ரிஷப் ஷெட்டி. வெறும் 16 கோடி ரூபாய் செலவில் கன்னட மொழியில் எடுக்கப்பட்ட, இந்த படத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரீக்குவல் ”காந்தாரா அத்தியாயம் 1” என்ற பெயரில் வரும் அக்டோபர் 2-ம் தேதி (Kantara Chapter 1 Trailer) வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
காந்தாரா படத்தின் கதை
காந்தாரா படத்தின் கதை ஒரு உண்மை சம்பவத்தை மையப்படுத்தி தான் எடுக்கப்பட்டுள்ளதாக ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் கெரடி என்ற பழங்குடி கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கும் – வன அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் இந்தப் படத்தில் படமாக்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும் காந்தாரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் பழங்குடி மக்களின் பூஜையும், கோலா நடனமும் தான். இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தைக் கொடுத்தது.
இந்நிலையில் காந்தாரா படத்தின் அடுத்த பாகம் வெளியாகிறது என்று தகவல் இணையதளத்தில் வெளியானதும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அடுத்த பாகத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. இதற்கு காரணம் காந்தாரா முதல் பாகத்திலேயே வில்லன் கொல்லப்பட்டுவிட்டார் எனும்போது, இரண்டாவது பாகத்தின் கதை எப்படி நகரும் என்ற கேள்வி இருந்தது. இதற்கு படக்குழுவினர் காந்தாரா இரண்டாவது பாகமாக உருவாக்கவில்லை, படத்தின் ப்ரீக்குவல் கதையை சாப்டர் 1 என்று உருவாக்கி வருகிறோம் என்று சொன்னதும் முன்பை காட்டிலும் படத்தின் மீது எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.
ட்ரெய்லர் எப்படி இருக்கு (Kantara Chapter 1 Trailer)
காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது தத்ரூபமான சண்டைக் காட்சிகளால் படம் நிறைந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதேபோல் படத்தில் சில முக்கிய காட்சிகள் சி.ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி (Kantara Chapter 1 Trailer) உருவாக்கி உள்ளார்கள் என்பதையும் உணர முடிகிறது. காந்தாரா படம் புராணக் கதையோடு தொடர்புடைய கதை என்றாலும், படத்தில் சில சினிமாடிக் காட்சிகள் இருப்பதையும் தெளிவாக பார்க்க முடிகிறது. ஒட்டுமொத்தமாக காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் ட்ரெய்லரை பார்க்கும்போது ரசிகர்களுக்கு தாறுமாறான எக்ஸ்பீரியன்ஸை கொடுக்க வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் ரிலீஸ் செய்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!