சேப்பாக்கத்தில் முச்சதம் அடித்த Karun Nayar | தற்போது வாய்ப்பு கிடைக்காததால் விரக்தி
சென்னை :
கடந்த 2016ம் ஆண்டு சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்திய டெஸ்ட் அணியில் Karun Nayar முச்சதம் அடித்தார். ஆனால் அதன்பிறகு இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் தொடரிலும் சரி வாய்ப்பு மறுக்கப்பட்டதால், இங்கிலாந்து உள்ளூர் தொடரில் விளையாட சென்றார். இந்திய டெஸ்ட் அணியில் இரண்டு வீரர்கள் மட்டுமே முச்சதம் அடித்துள்ளனர். 2004ல் பாகிஸ்தானிலும், 2008ல் சென்னையிலும் மும்முறை சதம் அடித்த வீரேந்திர சேவாக். அதன்பிறகு அந்த சாதனையை எந்த வீரரும் செய்ய முடியாது என நினைத்த நிலையில், 2016ல் இங்கிலாந்து அணிக்கு எதிரான சேப்பாக்கத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் Karun Nayar டிரிபிள் சதம் அடித்தார். அதன்பிறகு, இந்திய கிரிக்கெட்டில் Karun Nayar தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஓரிரு போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ரன் குவிக்க முடியாததால், டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதன்பிறகு சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடிய அவருக்கு தற்போது ஐபிஎல்லில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
Karun Nayar :
ரஞ்சி தொடரில் தன்னை நிரூபிக்க இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியில் இருந்த Karun Nayar தற்போது இங்கிலாந்து கவுண்டி போட்டிகளில் விளையாட தயாராகி விட்டார். இதற்கு முன் அவர் நார்தம்ப்டன்ஷயர் கவுண்டிக்காக மூன்று இன்னிங்ஸ்களில் 78, 150 மற்றும் 21 ரன்கள் எடுத்திருந்தார். அதே அணி ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏழு கவுண்டி டெஸ்ட் போட்டிகளில் அவரை மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. 32 வயதிலும் இந்திய அணிக்காக விளையாட முடியும். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை புரிந்து கொண்ட Karun Nayar இங்கிலாந்து கவுண்டி போட்டிகளுக்கு தாவியுள்ளார். இந்திய டெஸ்ட் அணியின் தூணாக இருந்த புஜாராவுக்கும் அப்படித்தான் நடந்துள்ளது. இந்தியாவின் உள்ளூர் டெஸ்ட் தொடரான ரஞ்சி தொடரில் விளையாடிய பிறகு இங்கிலாந்தின் கவுண்டி தொடரிலும் விளையாடுவார்.
Latest Slideshows
-
Reduce Body Heat Foods : இயற்கை முறையில் உடல் சூட்டை குறைக்கும் 10 சிறந்த உணவுகள்..!
-
Diabetes Food Chart in Tamil : சர்க்கரை நோயாளிகளுக்கான ஆரோக்கிய உணவு பட்டியல்..!
-
Ayilai Fish Benefits in Tamil : அயிலை மீனின் ஆரோக்கிய இரகசியங்கள்..!
-
Pongal 2026 : பொங்கல் பண்டிகையின் வரலாறும் & முக்கியத்துவமும்..!
-
Jananayakan Legal Issue : 'ஜனநாயகன்’ படத்துக்கு U/A சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவு.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு!
-
Parasakthi Review : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தின் திரை விமர்சனம்..!
-
Raja Saab Movie Review : பிரபாஸின் ‘தி ராஜா சாப்‘ படத்தின் திரை விமர்சனம்..!
-
WPL 2026 : மகளிர் ஐபிஎல் இன்று தொடக்கம்.. முதல் போட்டியில் மும்பை - பெங்களூரு மோதல்..!
-
Humming Bird : ஓசனிச்சிட்டு பற்றி தெரியுமா? ஆச்சரியப்படும் உண்மைகள்..!
-
Jananayagan Postponed : ‘ஜனநாயகன்’ படம் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைப்பு.. படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பு