கிர்ணி பழத்தில் உள்ள கார்போஹைட்ரேட், புரதம், இரும்பு, மெக்னீசியம், கால்சியம், மற்றும் வைட்டமின் C, E, பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் உடல் வலிமையை அதிகரிக்கின்றன.
(Kirni Fruit Benefits in Tamil) கிர்ணி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய மற்றும் மருத்துவ நன்மைகள்
1. Kirni Fruit Benefits in Tamil : கண்பார்வையை மேம்படுத்துகிறது
கிர்ணி பழத்தில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின் (Beta-carotene) மற்றும் வைட்டமின் A கண் பார்வைக்கு மிகவும் நல்லது. இவை கண்ணின் விழித்திரை சேதமடைவதைத் தடுக்கின்றன. கோடை வெயிலால் ஏற்படும் கண் எரிச்சலை நீக்கி கண்பார்வையை மேம்படுத்துகின்றன மற்றும் கண் நோய்களைத் தடுக்க உதவுகின்றன.
2. நுரையீரல் ஆரோக்கியத்தை காக்க வல்லது
கிர்ணி பழத்தில் உள்ள வைட்டமின் A சத்து நுரையீரலில் ஏற்படும் பாதிப்புகளைச் சீர்செய்ய உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. நுரையீரலில் வரும் புற்றுநோய் ஆபத்தை குறைக்கும். இதனால் நுரையீரல் ஆரோக்கியம் மேம்படும்.
3. உடலின் நீர்ச்சத்து, மற்றும் மினரல் இழப்பை ஈடு செய்யும்
கோடைக்காலத்தில் வியர்வையால் நீர்ச்சத்து இழப்பு, மற்றும் மினரல் இழப்பு அதிகம் ஏற்படும். கிர்ணி பழத்தில் 90% நீர், பொட்டாசியம், மற்றும் மெக்னீசியம் இருப்பதால் அது வெயில் காலத்தில் உடலை குளிர்ச்சியாக்கி நீர்ச்சத்து மற்றும் மினரல் இழப்பை மீட்கும் (Kirni Fruit Benefits in Tamil).
4. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
கிர்ணி பழத்தில் உள்ள பொட்டாசியம் ஆனது ரத்த அழுத்தத்தை சீர்படுத்தி இதய துடிப்பை சமநிலைப்படுத்தும். மேலும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை கிர்ணி பழம் குறைக்கும்.
5. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
கிர்ணி பழத்தில் வைட்டமின் C அதிகமாக இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் காய்ச்சல், மற்றும் சளி போன்றவை வராமல் தடுக்கும்.
6. மலச்சிக்கலை போக்கும்
கிர்ணி பழத்தில் நிறைந்துள்ள செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்துகள் மலச்சிக்கலை நீக்கி குடல் சுகாதாரத்தை மேம்படுத்தும்.
7. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
கிர்ணி பழத்தில் உள்ள வைட்டமின் C, மற்றும் வைட்டமின் E ஆகியவை உடலின் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீர்படுத்தும்.
8. உடல் எடையைக் குறைக்க உதவும்
கிர்ணி பழத்தில் உள்ள குறைந்த அளவு கலோரி மற்றும் அதிக அளவு நீர், நார்ச்சத்து ஆனது உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் மற்றும் குறைக்கவும் உதவுகிறது.
9. மன அழுத்தத்தை குறைக்கும்
கிர்ணி பழத்தில் உள்ள பொட்டாசியம் நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைக்கும். மேலும் மூளை செயல்பாடு, மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்.
10. முடி வளர்ச்சிக்கு உதவும்
(Kirni Fruit Benefits in Tamil) கிர்ணி பழத்தில் உள்ள வைட்டமின் A, மற்றும் வைட்டமின் C முடியின் வேர்க்கால்களை உறுதிப்படுத்தும். மேலும் இது செபம் உற்பத்தியை சீராக்கி முடி உதிர்வை குறைத்து, முடி வளர்ச்சியை பலப்படுத்தும்.