கேரள அரசு ஆனது கியூ.ஆர் கோடு அடிப்படையில் செயல்படும் புதிய செயலியான “வினாத்தாள்–விடைத்தாள் லைவ் டிராக்” (KITE-QTrack App) என்ற நேரடி திறனாய்வு உபகரணத்தை 2026 மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேல்நிலைத் தேர்வுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க பயன்படும்.
கேரளாவின் டிஜிட்டல் கல்வியில் முன்னேற்றம்
உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளும் தரத்தில் நேர்மையான தேர்வு கட்டுப்பாட்டை கேரள அரசு தர விரும்புகிறது. தேர்வு நடைபெறும் நாட்களில், வினாத்தாள்கள் சேமிப்பகத்திலிருந்து எடுக்கப்படுவது முதல் ஒவ்வொரு மையங்களில் வினாத்தாள் உறைகளைத் திறப்பது முதல், விடைத்தாள்களை மதிப்பீட்டு முகாம்களுக்கு அனுப்புவது வரையிலான அனைத்து செயல்பாடுகளையும் நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிக்க இந்த செயலி (KITE-QTrack App) உதவுகிறது. தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு அதிகரிக்க இந்த செயலி சிறந்த முறையில் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு கியூ.ஆர் கோடு அடிப்படையில் செயல்படும் புதிய செயலி ஆகும். மேலும் இது மேல்நிலைத் தேர்வுகளின் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க பயன்படும்.
அனைத்து செயல்பாடுகளையும் நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் செயலி
இது ஒரு அனைத்து செயல்பாடுகளையும் நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிக்கும் செயலி ஆகும். வினாத்தாள்கள்களை சேமிப்பகத்திலிருந்து சேகரிப்பது முதல் ஒவ்வொரு மையங்களில் வினாத்தாள்கள் உள்ள உறைகளைத் திறப்பது முதல், மற்றும் அந்த விடைத்தாள்களை மதிப்பீட்டு முகாம்களுக்கு (KITE-QTrack App) அனுப்புவது வரையிலும் உள்ள அனைத்து விதமான செயல்பாடுகளையும் நிகழ்நேரத்தில் (Real-time) கண்காணிக்க முடியும். அதாவது லைவ் டிராக் செய்ய முடியும். இவற்றை சரிவர கண்காணிக்க மண்டல துணை இயக்குநர்களுக்குத் தனிப்பட்ட லாகின் வசதிகள் ஆனது வழங்கப்பட்டுள்ளன.
செயலியின் சிறந்த அம்சங்கள்
- தேர்வு மையங்களில் உள்ள வினாத்தாள் பொதிகளை QR கோட் ஸ்கேன் செய்து திறக்க உதவுகிறது. வினாத்தாள் அல்லாத தவறான பொதிகளை QR கோட் ஸ்கேன் செய்தால் உடனடியாக எச்சரிக்கை தரும்.
- தேர்வு தொடக்கம், முடிவு, மற்றும் விடைத்தாள் அனுப்புதல் (டிராக் ID, எடை, நேரம் உள்ளிட்ட விவரங்களுடன்) போன்ற அனைத்தும் ஆப்பில் பதிவு செய்யப்படும்.
- மோசடி, மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகளை இதன் மூலம் உடனடியாக (KITE-QTrack App) அறிவிக்க முடியும். மாநில அளவில் ரீஜனல் டிபுடி டைரக்டர்கள் (RDDs) கண்காணிக்கலாம்.
- உயர்நிலை அதிகாரிகளான மண்டல துணை இயக்குனர்கள் மற்றும் மாநில அலுவலர்கள் தனிப்பட்ட Login வாயிலாக செயலியின் அனைத்துத் தரவுகளையும் நேரடியா கண்காணிக்க முடியும். இதனால் உயர்நிலை அதிகாரிகள் தங்களது மேல்நிலை மேலாண்மை செயல்பாடுகளை மிகவும் திறம்பட கண்காணித்து செயல்பட முடியும்.
- இதன் மூலம் அனைத்து விதமான தகவல்களையும் டிஜிட்டல் சாதனங்களில் சேமிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. தரவுத்தளமாக பயன்படுகிறது.
இவ்விதமான அனைத்து செயல்பாடுகளில் ஏதேனும் சற்று முறைகேடுகள் அல்லது தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் அதனை உடனடியாகத் தெரிவிக்கும் வசதி ஆனது இந்த செயலியில் உள்ளது.