Kollu Benefits in Tamil: கொள்ளு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், தீமைகள்
பல வகையான சிறுதானியங்கள் நம் நாட்டில் பரவலாகப் பயிரிடப்பட்டு மக்களால் உண்ணப்படுகிறது. அதில் மிகவும் பிரபலமான தானியங்களில் ஒன்றாக கொள்ளு உள்ளது. இந்த தானியம் பெரும்பாலும் குதிரைகளுக்கு உணவாக கொடுக்கப்படும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் மனிதர்களுக்கு பல வகையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் தானியமாக கொள்ளு உள்ளது. இந்த கொள்ளு இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள மக்களால் பரவலாக உட்கொள்ளப்படுகிறது. கொள்ளு தானியத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அதனால்தான் நம் நாட்டின் பழங்கால மருத்துவ சிகிச்சை முறையான ஆயுர்வேதத்தில் கொள்ளு பற்றிய குறிப்புகள் உள்ளன. அந்த கொள்ளு தானியங்களை நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
கொள்ளு நன்மைகள் (Kollu Benefits in Tamil)
உடல் எடை குறைப்பதற்கு
Kollu Benefits in Tamil: உடல் எடையை குறைப்பதில் கொள்ளு மிக சிறந்த உணவாக இருக்கிறது. நம் நாட்டில் பழங்காலத்திலிருந்தே எடை இழப்புக்கான உணவாக கொள்ளு பரிந்துரைக்கப்படுகின்றன. நன்றாக பொடி செய்து தினமும் காலையில் தண்ணீர் விட்டு குடித்து வருபவர்களுக்கு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் மிக விரைவில் கரைந்து உடல் எடை கட்டுக்குள் இருக்கும். ஏதேனும் ஒரு உணவு இடைவேளையில் உணவிற்கு பதிலாக முளைத்த கொள்ளு சாப்பிட்டு வருவதால் உடல் எடை விரைவில் குறையும்.
ஜலதோஷம் மற்றும் ஜீரம் நீங்க
Kollu Benefits in Tamil: ஜலதோஷம் என்பது சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றாகும். மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது மேற்கண்ட தொற்று ஏற்படுகிறது. இந்திய பாரம்பரிய மருத்துவமான ஆயுர்வேதத்தில், காய்ச்சல் மற்றும் ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கொள்ளு ரசம் அல்லது கொள்ளு கொண்டு செய்யப்பட்ட சூடான உணவை அதிகம் சாப்பிடுவதால்,ஜலதோஷம் மற்றும் ஜீரம் விரைவாக குணப்படுத்துகிறது மற்றும் இந்த நோய்களால் இழந்த உடலை மீட்டெடுக்கிறது.
அஜீரணம் மற்றும் செரிமான பிரச்சனை நீங்க
Kollu Benefits in Tamil: நல்ல ருசி நிறைந்த உணவுகளை சாப்பிட்ட பிறகு சிலருக்கு நெஞ்சு பகுதியில் எரிச்சல், புளிப்பு ஏப்பம் போன்றவை ஏற்படும்.இது அஜீரணத்தின் அறிகுறியாகும். மேலும் வயிற்றில் உணவை ஜீரணிக்க உதவும் அமிலங்கள் சரியாக உற்பத்தி செய்யப்படாமல், உணவு மீண்டும் தொண்டைக்குள் தள்ளப்பட்டு வாந்தி எடுக்கும் உணர்வைத் தருகிறது. இந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் தினமும் காலையில் உணவு சாப்பிடுவதற்கு முன்பாக முளைவிட்ட கொள்ளு அல்லது கொள்ளால் செய்யப்பட்ட சூப் குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் நீங்கும்.
மாதவிடாய் பிரச்சனைக்கு
Kollu Benefits in Tamil: மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி பெண்கள் மட்டுமே உணர்ந்த ஒன்றாகும். ஒரு சில பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய், அதிக இரத்தப்போக்கு மற்றும் கடுமையான வலியை அனுபவிக்கிறார்கள், இது அவர்களை மிகவும் சோர்வடையச் செய்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளால் அவதிப்படும் பெண்கள் கொள்ளு கொண்டு செய்த உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும் என்று நமது பாரம்பரிய மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. கொள்ளு தானியங்களில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது பெண்களின் மாதவிடாய் காலங்களில் அதிக இரத்தப்போக்கு காரணமாக உடல் இழக்கும் ஊட்டச்சத்துக்களை ஈடு செய்கிறது. மேலும் மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான எரிச்சல் மற்றும் வலியை குறைக்கிறது.
நீரிழிவு நோய் கட்டுப்படுத்த
Kollu Benefits in Tamil: நீரிழிவுக்கு நோய்க்கு கொள்ளு உணவு சிறந்த உணவாக இருக்கிறது. கொள்ளு தானியத்தில் ஹைப்பர் கிளைசீமிக் எதிர்ப்பு வேதிப்பொருட்கள் உள்ளது. அதனுடன் இன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைக்கும் வேதிப் பொருட்கள் இந்த தானியத்தில் நிறைந்துள்ளது. கொள்ளு சூப் அல்லது கொள்ளு தானியத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோயாளிகள் அதிக நார்ச்சத்து பெறுவதோடு, அவர்களின் இரத்தத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரித்து, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் முழு தானிய உணவுகளை தாராளமாக உண்ணலாம்.
லூகோரியா நோய்க்கு
Kollu Benefits in Tamil: லூகோரியா என்பது பெண்களுக்கு மட்டுமே ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். குறிப்பாக பருவ வயதை தாண்டிய பெண்கள் பிறப்பு உறுப்புகளில் ஏற்படும் கிருமி தோற்றால் பிறப்புறுப்பு மற்றும் கருப்பையின் வாய்ப் பகுதியில் அதிக எரிச்சல் மற்றும் வலியை ஏற்படுத்தி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. லூகொரியா நோயால் கஷ்டப்படும் பெண்களுக்கு கொள்ளு ஒரு சிறந்த தானியமாக உள்ளது. கொள்ளு தானியத்தை இரவில் சிறுதளவு நீரில் ஊறவைத்து, ஊறவைத்த நீரோடு வேகவைத்து, இதில் இருக்கும் நீரை சேமித்து ஒரு நாளைக்கு மூன்று முறை குடித்து வந்தால் பெண்களுக்கு இவ்வாறான பிரச்சனைகள் விரைவில் நீங்கும்.
சிறுநீர் கற்களை கரைக்க
Kollu Benefits in Tamil: கொள்ளு தானியத்தை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறிய அளவிலான சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும். கொள்ளுவையும் இந்துப்பையும் நீரில் சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள், சிறுநீரக பாதை போன்ற உறுப்புகளில் உருவாகும் கற்களை நீக்குகிறது.
விந்தணுக்கள் அதிகரிக்க
கொள்ளுவில் பாஸ்பரஸ், அமினோ அமிலங்கள், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இவை ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து, மலட்டுத்தன்மையை நீக்க உதவுகிறது.
மலச்சிக்கல் நீங்க
Kollu Benefits in Tamil: காலையில் எழுந்ததும் கழிவறையில் பலரும் படாதபாடு படுகின்றனர். இது மலச்சிக்கல் பிரச்சனைக்கான அறிகுறியாகும். மனிதர்களின் உடலில் வயிறு மற்றும் குடல் ஒரே நேர்கோட்டில் இல்லாத போது மலமாக மாறியிருக்கும் திடக்கழிவுகளை வெளியேற்ற ஆசனவாய் குடல் சுருங்கி விரிவதற்கு சிரமப்படுகிறது. இதனையே மலச்சிக்கல் என்கிறோம். இவ்வாறான பிரச்சனைகள் நீங்குவதற்க்கு கொள்ளு தானியத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் நீங்கும்.
கண் நோய்கள் குணமாக
மழைக்காலத்தில் பல்வேறு விதமான தொற்று நோய்கள் அவற்றில் மெட்ராஸ் ஐ நோயும் பலருக்கு வருகிறது. இந்த நோய் ஏற்படும் போது, கண்களை திறக்க முடியாமல் மிகுந்த சிரமம் மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது. இரவில், கொள்ளு தானியங்களை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த நீரால் கண்களைக் கழுவினால், கண் எரிச்சல், கஞ்சிக்காய்ச்சல் நோய்க்கு காரணமான கிருமிகள் நீங்கி, கண்கள் விரைவில் குணமாகும். கொள்ளு தானியம் பாரம்பரிய உணவாக உள்ளது இந்த உணவை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேலே உள்ள எந்த விதமான நோயும் வராமல் தடுக்கலாம்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!