KP Ramasamy Rank 100th In Forbes List : இந்தியாவின் 100 பணக்காரர்களின் Forbes List-ல் 100வது இடத்தைப் பிடித்த KP.ராமசாமி
KP Ramasamy Rank 100th In Forbes List :
ஜவுளி மற்றும் சர்க்கரை உற்பத்தி செய்யும் KPR மில் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் KP ராமசாமி Rs.19,133.7 கோடி சொத்து மதிப்புடன் இந்தியாவின் 100 பணக்காரர்களின் Forbes பட்டியலில் 100வது (KP Ramasamy Rank 100th In Forbes List) இடத்தைப் பிடித்துள்ளார். Forbes வெளியிட்ட இந்தியாவின் 100 பணக்காரர்களின் பட்டியலில்,
- ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி (92 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்) – No 1
- அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி (68 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்) – No 2
- HCL நிறுவனர் ஷிவ் நாடார் (29.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன்) – No 3 இடத்தில் உள்ளனர்.
KPR மில் ஆனது பின்னப்பட்ட ஆடைகள், பருத்தி மற்றும் பாலியஸ்டர் நூல் தயாரிப்பிலும், சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தியிலும் நல்ல நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். 74 வயதான KP ராமசாமி ஈரோடு மாவட்டம், கல்லியம்புதூர் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய கே.பி.ராமசாமி, இந்தியாவின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதி வணிகம் ஒன்றை நிறுவி அதில் வெற்றி பெற்றுள்ளார். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் ராமசாமி மற்றும் அவரது சகோதரர்களால் 1984ல் நிறுவப்பட்ட KPR மில் ஆனது ஆரம்பத்தில், சலவை, சாயமிடுதல், அச்சிடுதல் மற்றும் எம்பிராய்டரி போன்றவற்றை அவுட்சோர்ஸ் செய்து படிப்படியாக முன்னேற்றம் கண்டது.
இந்த KPR மில் 2010 ஆம் ஆண்டளவில் நூல் மற்றும் துணி தயாரிப்பாளராக உருவாகி உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் போட்டியிடுகிறது. கே.பி.ராமசாமி 2013 ஆம் ஆண்டில் சர்க்கரை உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்கினார். பின்னர் 2019 ஆம் ஆண்டில் கே.பி.ராமசாமி ஆண்களுக்கான இன்னர்வேர் பிராண்டான Fasoவை விற்பனை செய்யும் நிறுவனமாக விரிவுபடுத்தினார்.
KPR மில் சர்க்கரை மற்றும் எத்தனால் உற்பத்தி செய்வதோடு மட்டுமல்லாமல் பருத்தி, பாலியஸ்டர் மற்றும் பின்னப்பட்ட ஆடைகள் தயாரிப்பிலும் நல்ல நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் ஆகும். KPR மில் ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு உடைகள் முதல் நைட் டிரஸ் வரை என 128 மில்லியன் கணக்கில் எண்ணற்ற ஆடைகளை உற்பத்தி செய்கிறது. H&M, Marks & Spencer மற்றும் Walmart போன்ற கடைகளில் இந்த KPR மில் ஆடைகள் விற்கப்படுகின்றன. இதுவரை இல்லாத வகையில் KPR மில் Rs.1,100 கோடி மதிப்பிலான ஆடை ஆர்டர் புத்தகத்தை எட்டியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பின்னலாடை ஆடை உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறியுள்ள KPR மில் ஆனது ஒவ்வொரு ஆண்டும் லாபகரமாக ரூ.6,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!