Krishna Jayanthi History : கிருஷ்ண ஜெயந்தி வரலாறு
கிருஷ்ணர் வாசு தேவருக்கும் தேவகிக்கும் 8ஆவது குழந்தையாக ஆவணி மாதம், அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திர நாளில் பிறந்தார். இந்த மூன்றும் சேர்ந்து ஒரே நாளில் வருவது மிகவும் அபூர்வமான ஒன்று ஆகும். அந்த நாளில் கிருஷ்ணரின் பிறந்தநாளை (Krishna Jayanthi History ) கிருஷ்ண ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. மேலும் திதியை கணக்கிட்டு அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுவதை கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
வடஇந்தியர்கள் திதியை கணக்கிட்டு கோகுலாஷ்டமி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். கிருஷ்ணரின் பிறந்தநாள் அன்று அவருக்கு விரதமிருக்கிறார்கள். கிருஷ்ணர் மீதான அன்பின் காரணமாக பக்திப் பாடல்களைப் பாடியும், இரவு முழுவதும் கண் விழித்திருப்பதன் மூலமும் கொண்டாடுகிறார்கள். சிறு குழந்தைகளின் கால் தடத்தை வீட்டு வாசலில் இருந்து பூஜை அறை வாசல் வரை அரிசி மாவால் கோலமிடுவார்கள். இதன் மூலமாக கிருஷ்ணரை வீட்டுக்கு வா என அழைப்பதாக ஐதீகம்.
கிருஷ்ணர் இரவு நேரத்தில் பிறந்தவர் என்பதால், கிருஷ்ண ஜெயந்தி பூஜைகள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு கொண்டாடப்படுகிறது.கிருஷ்ணருக்குப் பிடித்தமான தயிர், வெண்ணெய் போன்ற பால் சார்ந்த பொருட்கள், இனிப்பு சீதை, வேர்க்கடலை உருண்டை, பழங்கள், மற்றும் வெற்றிலை போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும். உணவுகளை படைத்து தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். மாலை 6 மணிக்கு மேல் விளக்கேற்றி இந்த பிரசாதத்துடன் பூஜைகள் செய்து பக்தர்கள் தங்கள் விரதத்தை முடிக்கிறார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி வரலாறு (Krishna Jayanthi History )
கிருஷ்ணரின் பெற்றோர் வாசு தேவரும் தேவகியும் அவரது மாமா கம்சனால் கட்டுப்படுத்தப்பட்டு வாழ்ந்து வந்தனர். தேவகியின் திருமணத்தின் போது, தேவகியின் எட்டாவது மகன் தனது மரணத்திற்குக் காரணமாக இருப்பார் என்ற தெய்வீக அசரீரியை கேட்டதன் முதல் கிருஷ்ணரின் பெற்றோருக்கு சுதந்திரங்கள் மறுக்கப்பட்டன மற்றும் துன்புறுத்தல்கள் அதிகமாயின. அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை வரிசையாக கொன்றார்.
தேவகியின் எட்டாவது குழந்தை கிருஷ்ணர் பிறந்த நேரத்தில் சிறை கதவுகள் (Krishna Jayanthi History) அதிசயமாக அற்புதமாகத் திறக்கப்பட்டன. வாசுதேவர் குழந்தை கிருஷ்ணரை காப்பாற்றி வளர்ப்பு தாய், தந்தையான யசோதா, மற்றும் நந்தா ஆகியோரிடம் சேர்த்தார். கிருஷ்ணர் சிறப்பாக வளர்ந்து உரிய காலத்தில் கம்சனை கொன்றார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!