Gistak Media

Kumki 2 Motion Poster Released : 13 ஆண்டுகளுக்கு பிறகு விரைவில் கும்கி 2 வெளியாகிறது

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை உலுக்கிய திரைப்படம் கும்கி. நடிகர் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் இருவருக்கும் அறிமுகப்படமான இது பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்த படத்தில் காதல், நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சி என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான உணர்வுபூர்வமான பயணத்தை ரசிகர்களுக்கு கொடுத்தது. இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கும்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் (Kumki 2 Motion Poster Released) எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்கி பாடத்தின் கதை

ஒரு மலைவாழ் பழங்குடி பெண்ணுக்கும், யானைப்பாகனுக்கும் இடையே மலரும் காதலை மையமாக கொண்டு கும்கி திரைப்படம் உருவானது. மலை கிராமங்களில் தொந்தரவு செய்யும் மதம் பிடித்த காட்டு யானையிடம் இருந்து, காப்பாற்ற தன் யானையை அழைத்து செல்லும் ஹீரோ (விக்ரம் பிரபு) அப்போது, அந்த கிராமத்து பெண்ணான லட்சுமியுடன் (லட்சுமி மேனன்) அவனுக்குக் காதல் மலரும்.

கும்கி படத்தின் கதைக்களம் ரசிகர்களை கவர்ந்தாலும், தம்பி ராமையாவின் நகைச்சுவை நடிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய பொழுதுபோக்காக அமைந்தது. அதேபோல், டி.இமானின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன. அதிலும் குறிப்பாக, ‘அய்யய்யோ அய்யய்யோ’, ‘சொல்லிட்டாளே அவ காதல’ போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்கள் கேட்டு மகிழ்கின்றனர்.

விரைவில் கும்கி 2 (Kumki 2 Motion Poster Released)

Kumki 2 Motion Poster Released - Gistakmedia

கும்கி படத்தின் கிளைமாக்ஸ்ஸில் யானை உயிரிழக்கும் காட்சி, பலரையும் கண் கலங்க செய்தது. இப்போது, கும்கி 2 வின் மோஷன் போஸ்டரில் ‘நான் மீண்டும் பிறந்துவிட்டேன்’ என்ற வாசகம் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் (Kumki 2 Motion Poster Released) பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சென்ற பாகத்தில் வளர்ந்த யானை வந்தது போல, இந்த கும்கி இரண்டாம் பாகத்தில் சின்ன யானையை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க கும்கி 2 படத்தையும் இயக்குநர் பிரபு சாலமனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் விக்ரம் பிரபுவுக்கு கிடைத்த வரவேற்பு போலவே, இந்த படத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கும் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் ‘மோஷன் போஸ்டரை’ வெளியிட்ட நடிகர் சிம்பு, படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top