Kumki 2 Release Ban : கும்கி 2 படம் வெளியிட இடைக்காலத் தடை?
இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான (Kumki 2 Release Ban) படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இதில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் மற்றும் தம்பி ராமையா என பலரும் சிறப்பாக நடித்திருந்தனர்.
‘கும்கி 2’ ஒரு குறிப்பு (Kumki 2 Release Ban)
இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பிரபு சாலமன் ‘கும்கி 2’ படத்தை உருவாக்கியுள்ளார். இந்தப் படத்தில் அறிமுக நாயகன் மதி, ஸ்ரீதா ராவ், ஆண்ட்ரூஸ், அர்ஜுன் தாஸ், ஆகாஷ், ஸ்ரீநாத், ஹரிஷ் பெரடி மற்றும் இயக்குநர் திருச்செல்வம் உட்பட பலரும் நடித்துள்ளனர். அறிமுக நாயகன் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஒரு சிறுவனுக்கும் மற்றும் யானைக்கும் இடையேயான பந்தத்தை இந்தப் படத்தில் பிரபு சாலமன் சிறப்பாக காட்டியிருக்கிறார். இந்தப் படத்தின் இசையமைப்பை நிவாஸ் கே பிரசன்னா செய்திருக்கிறார். ஒளிப்பதிவு வேலையை சுகுமார் செய்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் காடுகளுக்குள்ளே எடுக்கப்பட்டுள்ளது. இந்த கும்கி 2 படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. கும்கி 2 படம் வரும் Nov 14-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கபட்டிருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இந்த கும்கி 2 படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
கும்கி 2 படத்தை வெளியிட தற்காலிக தடை
சினிமா பைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் அவர்கள் இயக்குநர் பிரபு சாலமன் தன்னிடம் வாங்கிய ரூ.2.5 கோடி கடனை திருப்பி தராமல் கும்கி 2 படத்தை (Kumki 2 Release Ban) வெளியிடக்கூடாது என வழக்கு தொடர்ந்துள்ளார். கும்கி 2 படத்துக்கு பிரபு சாலமன் வாங்கிய ரூ.1.5 கோடியை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆனது கும்கி 2 படத்தை வெளியிட தற்காலிக தடை ஒன்றை விதித்து உள்ளது. கடந்த 06.11.2025 அன்று கும்கி 2 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அந்த சந்திப்பில் படத்தின் சிறப்பம்சங்கள் பற்றி அனைவரும் பாராட்டி பேசியுள்ளனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!