Kushi Movie Trailer : குஷி படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு...
குஷி திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது, தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் குஷி திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்தை ஷிவ நிர்வாணா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் சச்சின் கெதெக்கர், ராகுல் ராமகிருஷ்ணா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கி, ஹைதராபாத், ஆலப்புழா, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் நடைபெற்றது.
இதற்கிடையில், சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டார், மேலும் தொடர்ந்து படப்பிடிப்பு தடைபட்டது. இதனை தொடர்ந்து குஷி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ‘என் ரோஜா நீயா’ என்ற முதல் சிங்கிள் பாடலும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
Kushi Movie Trailer :
இதுவரை வெளியான அனைத்து போஸ்டர்களிலும் சமந்தா பர்தா அணிந்து காணப்பட்டதால், இப்படத்தில் அவர் இஸ்லாமிய பெண்ணாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அங்குதான் ஒரு ட்விஸ்ட் கொடுத்திருக்கிறார்கள். முதல் சில நிமிடங்களில் மீண்டும் பாம்பே படம் போல தோற்றமளித்த டிரைலர் மெதுவாக அதன் தடத்தை மாற்றுகிறது. பிராமண பெண்ணான சமந்தா, விஜய் தேவரகொண்டாவை காதலிக்கிறார். இருவருமே தங்கள் குடும்பத்தாரின் எதிர்ப்புகளைத் தாண்டி, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வோம் என்று சபதம் செய்கிறார்கள். தொடக்கத்தில் எல்லாம் சுமூகமாக நடந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல அவர்களுக்குள் புதிய பிரச்சனைகள் வரத் தொடங்கும்.
இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து தங்கள் குடும்பங்கள் முன்னிலையில் இந்த ஜோடி மகிழ்ச்சியான ஜோடியாக வாழ்வதுதான் படத்தின் கதை. ரொமான்டிக் காமெடியாக உருவாகி வரும் இந்தப் படம், வழக்கமான படங்களைத் தாண்டி ரசிகர்களுக்கு புதுமையைச் சொல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படத்தின் டிரைலர் (Kushi Movie Trailer) ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!