Lab Technician Recruitmnent 2023: நீங்கள் லேப் டெக்னிசீயனா… மாதம் ரூ. 60 சம்பளத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் ஆய்வக உதவியாளர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பினை மருத்துவ பணியாளர் தேர்வு ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்களை தற்காலிகமான அடிப்படையில் நிரப்ப உள்ளன. விண்ணப்பிக்க விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
Lab Technician Recruitmnent 2023 பணியிட விவரம்
* ஆய்வக உதவியாளர்
* மொத்த பணியிடங்கள் – 332
கல்வித் தகுதி: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு மருத்துவ கல்லூரி அல்லது மருத்துவ கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் மெடிக்கல் லேப் டெக்னாலஜி படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்: இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ. 19,500 முதல் ரூ. 62,000 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 13,000 வழங்கப்படும். இரண்டு ஆண்டுகளுக்கும் 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும்.
வயது வரம்பு: பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை: இந்த பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://mrbonline.in/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணமாக பொது பிரிவினருக்கு ரூ.600, பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 ரூபாய் விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02/07/2023.








