Gistak Media

Lava Agni 2S 5G ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகமாகிறது

இந்தியாவின் Lava நிறுவனம் தொடர்ந்து அசத்தலான 5G ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் இந்நிறுவனம் குறைந்த பட்ஜெட் விலையில் 5G போன்களை அறிமுகம் செய்வதால் பயனாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஒரு அட்டகாசமான 5ஜி போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. லாவா அக்னி 2எஸ் (Lava Agni 2S 5G) எனும் புதிய ஸ்மார்ட்போன் தான் அறிமுகம் செய்ய உள்ளது. இணையதளத்தில் வெளியான தகவலின்படி November மாதம் இறுதியில்  Lava Agni 2S 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lava Agni 2S 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்கள் :

1. Lava Agni 2S 5G Display :

  • லாவா அக்னி 2S 5ஜி (Lava Agni 2S 5G) ஸ்மார்ட்போன் 6.78-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் வளைந்த AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2400×1080 பிக்சல்ஸ், 950 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய Lava 5G ஸ்மார்ட்போன் வெளிவருகிறது. குறிப்பாக பெரிய டிஸ்பிளேவுடன் இந்த போன் விற்பனைக்கு வருவதால்  பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

2. Lava Agni 2S 5G Storage :

  • 8GB RAM மற்றும் 256GB ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய லாவா போன். மேலும் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் ஆதரவும் இதில் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த Lava Agni 2S 5G போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். ஆண்ட்ராய்டு OS 13 இயங்குதள வசதியுடன் இந்த லாவா அக்னி 2S 5G ஸ்மார்ட்போன் வெளிவரும் என்றும் லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

3. Lava Agni 2S 5G Camera :

  • இந்த லாவா அக்னி 2S 5G  ஸ்மார்ட்போன் 50MB பிரைமரி கேமரா + 8MB  அல்ட்ரா வைடு கேமரா + 2MB டெப்த் சென்சார் + 2MB மேக்ரோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவருகிறது.
  • எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அருமையான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 32MB கேமராவுடன் இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.

4. Lava Agni 2S 5G Battery :

  • இந்த லாவா அக்னி 2S 5G  ஸ்மார்ட்போனில் பயோமெட்ரிக்ஸிற்கான இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் கைரேகை ஸ்கேனர் மற்றும் இணைப்பிற்கான USB  Type-C போர்ட் ஆகிய சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது. மேலும் 66W சார்ஜிங்குடன் 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. லாவா நிறுவனத்தின் கூற்றுப்படிவெறும் 16 நிமிடங்களுக்குள் 50% சார்ஜை வழங்குகிறது. அதுமட்டுமல்லாமல் Agni 2S சமீபத்திய 3வது ஜெனரல் 2900மிமீ² நீராவி சேம்பர் குளிரூட்டும் தொழில்நுட்பம் மற்றும் எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார் ஹாப்டிக் மோட்டாருடன் வருகிறது.

5. Lava Agni 2S 5G Rate :

  • 5G, டூயல் 4G வோல்ட்இ, வைஃபை 802.11 ஏஎக்ஸ், புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய Lava Agni 2S 5G ஸ்மார்ட்போன். இந்த லாவா அக்னி 2S 5G ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,999 விலையில் வாங்க முடியும் என்று இணையதளத்தில் தகவல் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top