காலையில் எலுமிச்சை–தேன் கலந்த நீர் குடிப்பது மிகவும் சக்திவாய்ந்த ஆரோக்கியமான (Lemon Honey Water Benefits) பழக்கமாகும். இதன் மூலம் மக்கள் தங்களது ஒவ்வொரு நாளையும் புத்துணர்ச்சியுடனும் மற்றும் ஆரோக்கியத்துடனும் தொடங்கலாம்.
சீரான செரிமானத்தை ஊக்குவிக்கிறது
காலையில் தினமும் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் உடலில் உள்ள செரிமான அமைப்பு ஆனது சிறப்பாக செயல்படும். எலுமிச்சை சாறு ஒரு gastric juice ஆகும். இந்த gastric juice ஆனது உணவு எளிதாக செரிக்கவும், வயிற்றுப்புண் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கவும் மற்றும் வாயுத் தொல்லைகளை குறைக்கவும் உதவுகிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கல்லீரலில் பித்த உற்பத்தியை ஊக்குவித்து உணவு ஜீரணத்தை எளிதாக்குகிறது. குடல் நலனை மேம்படுத்தும் prebiotic ஆக தேன் நல்ல முறையில் செயல்படுகிறது. இது அமிலத்தன்மை, மலச்சிக்கலைத் தடுக்கிறது மற்றும் இது மென்மையான ரெக்சடிவாக செயல்பட்டு வயிற்று அழற்சியைக் குறைக்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Lemon Honey Water Benefits)
எலுமிச்சை சாறில் உள்ள வைட்டமின் சி ஆனது வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது குறிப்பாக தொற்றுகளை எதிர்க்கும். தேனில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பண்புகள் சளி, மற்றும் ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்கின்றது. தினசரி காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி ஆனது அதிகரிக்கும்.
தோல் பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஆனது தோல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது குறிப்பாக தோலில் Collagen உற்பத்தியை அதிகரித்து முகப்பரு ஏற்படுவதை குறைக்கும் மற்றும் தோல் பிரகாசமாக ஒளிர உதவும். தேன் தோலிற்கு ஈரப்பதத்தை வழங்கும். இதனால் பொதுவாக தோல் உலர்ச்சி குறையும் மற்றும் தோல் (Lemon Honey Water Benefits) மென்மையாக இருக்கும். காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் தோல் பிரச்சனைகளை குறையும்.
உடல் எடையை குறைக்க உதவுகிறது
எலுமிச்சை, தேன் கலந்த நீர் பசியைக் கட்டுப்படுத்தி கலோரி உட்கொள்ளலை குறைக்கும். உடல் எடையை குறைக்க உதவும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் மற்றும் உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்பை கரைக்க உதவும். எலுமிச்சையில் இருக்கும் Polyphenols உடலில் கொழுப்பு (Lemon Honey Water Benefits) சேர்வதை குறைக்க உதவுகிறது. பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்க உதவுகிறது.
மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது
ஒரு மனிதனின் மனநிலையை மேம்படுத்தும் தன்மை எலுமிச்சை வாசனைக்கு உள்ளது. இதனால் ஒரு மனிதனின் மன அழுத்தம் குறையும் மற்றும் நாள் முழுவதும் ஒரு மனிதனுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதய ஆரோக்கியத்தை பேண உதவுகிறது
எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் (Potassium) ஆனது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி (Lemon Honey Water Benefits) ரத்த நாளங்களை பாதுகாக்கிறது. மேலும் இதய நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
சிறந்த மூளை செயல்பாடு ஏற்பட உதவுகிறது
எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் மனிதனின் நரம்பு செயல்பாட்டை மேம்படுத்தும். இதனால் மன அழுத்தம் குறைந்து நினைவாற்றல் அதிகரிக்கும் மற்றும் கவனம் அதிகரிக்கும்.
உடலை சிறந்த முறையில் சுத்தப்படுத்துகிறது
காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறுகிறது. உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதின் மூலம் ரத்தத்தை சுத்தமாக (Lemon Honey Water Benefits) வைத்திருக்க உதவுகிறது. எலுமிச்சையின் சிட்ரிக் அமிலம் கல்லீரலில் பித்த உற்பத்தியை ஊக்குவித்து சிறந்த கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தி உடல் தூய்மையைக் காக்கிறது.
சளி மற்றும் தொண்டை வலி பிரச்சனைகளை குறைக்கிறது
குளிர் காலங்களில் காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் சளி மற்றும் தொண்டை வலி பிரச்சனைகள் நீங்கும். எலுமிச்சை, தேன் கலந்த நீர் தொண்டை வலியை குறைக்கும், சளியை குறைக்கும் மற்றும் தொண்டையை சுத்தமாக வைத்திருக்க உதவும்.
சிறந்த சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவுகிறது
காலையில் எலுமிச்சை, தேன் கலந்த நீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும் அபாயம் குறைகிறது. மேலும் சிறுநீர் உற்பத்தி ஆனது அதிகரிக்கிறது.