-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
LEO (Bloody Sweet): மிரட்டலான புரோமோவுடன் வெளிவந்த தளபதி 67 டைட்டில்
Leo (Bloody Sweet): இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் விஜய் இவர்களின் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகும் படம் தளபதி 67. இந்த படத்திற்கு அதிகாரப்பூர்வமாக பெயர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெளியீடானது ‘விக்ரம்’ ஸ்டைலில் டைட்டல் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ மூலமாக வெளியிடப்பட்டது.
இதற்கு முன்பாகவே ரசிகர்கள் படத்திற்கு இது தான் டைட்டில் என ‘Gangster’, ‘Eagle’, ‘Goat’, ‘killer’, ‘குருதிப் புனல்’ மற்றும் ‘கருடன்’ என பல்வேறு டைட்டில்களை சமூக தளத்தில் பதிவிட்டு வந்தனர் ஆனால் அது எல்லாம் பொய்யாகி விட்டது. விக்ரம் படத்தைப் போலவே இந்த படத்திற்கும் ப்ரோமோ வீடியோவுடன் வெளியான இந்த அறிவிப்பில் படத்தின் பெயர் “லியோ” (LEO) என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “Bloody Sweet” என்பது படத்தில் விஜய் சொல்லும் வசனமாகும். வெளியான இந்த ப்ரோமோ விடியோவானது 2 நிமிடம் 48 வினாடிகள் உள்ளன. மேலும் இப்படத்தின் ரிலீஸ் தேதியாக அக்டோபர் 19, 2023 இல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது படமானது தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாவதாக கூறப்படுகிறது.
Leo "Bloody Sweet" Promo:
தளபதி விஜயின் இந்த Leo படமானது லோகேஷ் கனகராஜின் சினிமாட்டின் யுனிவர்ஸின் (LCU) கீழ் வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். வெளியான இந்த வீடியோவில் விஜய் ஒரு சாக்லேட் பாக்டரி அறையில் சாக்லேட் செய்வதுபோல் இருக்க, மறுபக்கம் ஆயுத பட்டறையில் கத்தி செய்வது போல் இருக்கிறது. மேலும் ‘விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் காட்சியில் பயன்படுத்தப்பட்ட அதே கார்கள் போன்ற விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் இது லோகேஷின் யுனிவர்ஸின் (LCU) கீழ் வரும் படம்தான் என பலரும் தெரிவித்துள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோவானது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் வீடியோ வெளியாகி ஒருநாள் ஆகிய நிலையில் இதுவரை 21 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.






