Leo Censor Report : லியோ படத்தில் 13 சென்சார் கட் | ரசிகர்கள் அதிர்ச்சி
Leo Censor Report :
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் 13 சென்சார் கட் செய்யப்பட்டுள்ளதாக சென்சார் போர்டு (Leo Censor Report) அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய் ஆவார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினராலும் விரும்பப்படும் நடிகரான இவர் தற்போது லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது. மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜுடன் இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். மேலும் இப்படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், கவுதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிக்கின்றனர்.
லியோ படம் குறித்து எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக அவ்வப்போது வெளியான அப்டேட்டுகள், பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த வாரம் வெளியான லியோ படத்தின் டிரைலர் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, ரன்னிங் டைம், சென்சார் சான்றிதழ், எந்தெந்த வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, லியோ படத்திற்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், சென்சார் போர்டு (Leo Censor Report) பரிந்துரைத்த வெட்டுக்கள் மற்றும் சேர்த்தல் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. லியோ படம் 164 நிமிடங்கள் 54 வினாடிகள் ரன்னிங் டைம் கொண்டதாக சமர்பிக்கப்பட்டதாகவும், சென்சார் முடிவில் படம் 164 நிமிடங்கள் 27 வினாடிகளாக குறைக்கப்பட்டதாகவும் (Leo Censor Report) கூறப்படுகிறது.
சில இடங்களில் படம் கட் செய்யப்பட்ட நிலையில், பல கெட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம், மதுபானம் மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளை பல இடங்களில் அனுமதிக்காமல் டேக் போஸ்ட் வைக்க தணிக்கை குழு அறிவுறுத்தியுள்ளது. சென்சார் அறிக்கையின்படி, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ படம் கொடூரமான ஆக்ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில், விஜய்யின் ‘லியோ’ படத்தில் 13 சென்சார் கட் செய்யப்பட்டதாக சென்சார் போர்டு (Leo Censor Report) அறிவித்துள்ளது. புகை மற்றும் போதைப்பொருள், ஆபாச வார்த்தைகள் மற்றும் இரத்தம் தெறிக்கும் காட்சிகள் ஆகியவையும் அகற்றப்பட்டுள்ளன. இந்த செய்தியை அறிந்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். மேலும் லியோ படம் உலக சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது. தமிழ், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகும். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே பல வெளிநாடுகளில் தொடங்கியுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் தமிழகத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!