Gistak Media – Cinema News | Trending News | Latest News

Leo Fulfilled Manobala Last Wish: மனோபாலாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய லியோ படக்குழு

கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகில் பிரபலங்களின் மரணங்கள் வாட்டி வதைத்து வருகின்றன. குறிப்பாக சொல்லணும் என்றால் நம்மளை சிரிக்க வைக்க வேண்டும் என்று அவர்களை காமெடியனாக பாவித்து நம்மை சிரிக்க வைத்த விவேக், டி.பி.கஜேந்திரன், மயில்சாமி ஆகியோரின் மரணம் அதிர்ச்சியை கொடுத்தது.

மனோபாலாவின் திடீர் மரணம்

தற்போது இயக்குனர், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட மனோபாலா நேற்று காலமானார். ஏற்கனவே மயில்சாமியின் மரணத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவித்த பல திரையுலக பிரபலங்களுக்கு மனோபாலாவின் மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்லீரல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் அவர் தனது வீட்டில் நேற்று திடீரென காலமானார்.

இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் சில பிரபலங்கள் நேரடியாக அவர்களது வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் ரஜினி தனது ட்விட்டரில் ‘பிரபல இயக்குனரும், நடிகருமான எனது அன்பு தோழன் மனோபாலாவின் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்று இரங்கல் தெரிவித்தார்.

இதையடுத்து மம்முட்டி, ஆர்.ஜே.பாலாஜி, சிம்ரன், செல்வராகவன், உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அடுத்ததாக நடிகர் விஜய் மனோபாலாவின் இல்லத்திற்கு சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அதில் அவரைப் பார்த்ததும், மிகவும் வாடிய முகத்துடனும், கையில் மாலையுடனும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், சில பிரபலங்கள் நேரடியாக அவர்களது வீடுகளுக்குச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

மனோபாலாவின் கடைசி ஆசை

மனோபாலாவின் கடைசி ஆசையையும் நிறைவேற்ற இருக்கிறார். நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மனோபாலாவின் கட்சிகளும் உள்ளன. இதை அவர் ஏற்கனவே நடித்துள்ளார். அப்போது லோகேஷ் இத்தனை காட்சிகள் தேவையில்லை, சில முக்கியமான காட்சிகள் போதும், மற்ற அனைத்தையும் நீக்குமாறு கூறினார்.

ஆனால் தற்போது லியோவில் மனோபாலாவின் அனைத்து காட்சிகளும் இருக்க வேண்டும் என லோகேஷிடம் கண்டிஷன் போட்டுள்ளார் நடிகர் விஜய். ஏனென்றால் இதுவே அவரது கடைசி படமாகும். அதனால் அவருடைய எல்லாவிதமான போர்சனும் போர்சன்களையும் மக்கள் பார்க்க வேண்டும் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் கண்டிப்பாக இதுதான் மனோபாலாவின் ஆசையாகவும் இருந்திருக்கும். எனவே நாம் அவருடைய ஆசையை நம்மால் முடிந்தவரை நிறைவேற்ற வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top