Leo Movie Special Show : லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
Leo Movie Special Show : நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகளுக்கு (Leo Movie Special Show) தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு விஜய்-லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ ஆகும். அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லோகேஷ் இயக்கும் LCU படங்களுடனும் லியோ இணைந்திருப்பதாகக் கூறப்படுவதால், இதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் படத்தின் இசைவெளியீட்டு விழா கடந்த 30 ஆம் தேதி நடக்க இருந்தது.
அதில் வழக்கம் போல் விஜய் கலந்து கொண்டு குட்டி ஸ்டோரி சொல்லுவார் என அவரது ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களால் கடைசி நேரத்தில் ரசிகர்களின் பாதுகாப்பு நலன் கருதி விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் லியோ படத்தின் ட்ரெய்லருக்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாடல் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Leo Movie Special Show - லியோ சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி :
தமிழக அரசு சமீப காலமாக திரைப்படங்கள் வெளியாகும் போது சிறப்பு காட்சிகளுக்கு (Leo Movie Special Show) அனுமதி வழங்குவதில்லை. தயாரிப்பு தரப்பில் கோரிக்கை வைத்தால் மட்டுமே சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கி வருகிறது. இந்நிலையில் லியோ படத்திற்கு சிறப்பு காட்சிகள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தமிழக அரசு நேற்று லியோ படத்திற்கு கூடுதல் காட்சிகள் போட அனுமதி அளித்துள்ளது. லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம், லியோ படத்தை வரும் அக்டோபர் 19ஆம் தேதி முதல் பண்டிகை நாட்களை முன்னிட்டு வெளியிட உள்ளதால் தமிழ்நாடு அரசு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளது.
Leo Movie Special Show : லியோ படம் வெளியாகும் அக்டோபர் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் 7 மணி சிறப்புக் காட்சிகளுக்கான அனுமதியும், 20 தேதி முதல் 24 தேதி வரை காலை 7 மணிக்கு அனுமதி கேட்டு மனு அளித்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த தமிழக அரசு, அக்டோபர் 19 முதல் 24 வரை தினமும் 5 சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான ஜெயிலர் படத்தை அதிகாலை திரையிட அனுமதி வழங்கப்படவில்லை. காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மாஸ் காட்டி வருகின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!