Gistak Media

Leo Premiere Show: ஒரு நாளுக்கு முன்பே வெளியாகும் லியோ

Leo Premiere Show: லியோ திரைப்படம் ரிலீஸுக்கு ஒரு நாள் முன்பாகவே வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் லியோ. இப்படத்திற்கு இசைமைப்பாளர் அனிருத் இசைமைத்துள்ளார். இந்தப் படத்தில் சஞ்சய் தத், த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகேஷ் இயக்கும் LCU படங்களுடனும் லியோ இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டு வழக்கம் போல் குட்டி கதை சொல்லுவார் என்று விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்கள் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் லியோ படத்தின் ட்ரெய்லருக்காக ஆவலுடன் காத்திருந்தது.

இதுதவிர லியோ படம் மற்றும் டிரைலர் குறித்து படக்குழுவினர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து லியோ படத்தின் அடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்பதால் படத்தின் டிரைலர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஏற்கனவே வெளியான டைட்டில் டீசர், ஆண்டனி, ஹரோல்ட் தாஸ் கிளிம்ப்ஸ், நா ரெடி தான் மற்றும் பேட்-ஆஸ் போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், லியோ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் லியோ திரைப்படம் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாவதாக தான் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக ஒரு நாட்களுக்கு முன்பே வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்படி என்றால் லியோ படத்திற்கு வரும் 18-ஆம் தேதி பிரீமியர் ஷோவாக வெளியாகிறதாம்.

பிரீமியர் ஷோ என்றாலே பிரபலங்களுக்கு மட்டும் போட்டு காட்டப்படும். இது சில திரையரங்குகளில் மட்டுமே போடப்படும். ஆனால் லியோ படத்தின் பிரீமியர் ஷோ வரும் 18ம் தேதி மாலை மற்றும் இரவு காட்சிகளாக 1,000 தியேட்டர்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “லியோ” படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அதற்கு முந்தைய நாள் பிரீமியர் ஷோவாக வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top