இந்தியாவில் தற்போது அமெரிக்கா, ஈரான் – இஸ்ரேல் இடையே (LPG Shortage News) ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, சமையல் எரிவாயு விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி இறக்குமதியானது கச்சா எண்ணெய் 85%- ஆகவும், மற்றும் LPG 90% – ஆகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுநர்கள் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கும் என கவலை தெரிவித்து உள்ளனர்.
நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளன
நாடு முழுவதும் வணிக சிலிண்டர்கள் விநியோகம் 09.03.2026-லிருந்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. டீலர்களுக்கு கமர்சியல் சிலிண்டர் வழங்க வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உணவகங்களுக்கு தேவையான அளவு சிலிண்டர்கள் கிடைக்காத நிலையானது ஏற்பட்டு உணவகங்கள் (LPG Shortage News) எல்லாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உணவகங்கள் போன்ற வணிகப் பயன்பாடுகளுக்கு மட்டுமின்றி, வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கும் கடுமையான தட்டுப்பாடு ஆனது ஏற்படத் தொடங்கியுள்ளது. இது பொதுமக்களுக்கு மிகுந்த கவலையளிக்கிறது. சிலிண்டர் முன்பதிவு செய்து பல நாட்கள் கடந்த பிறகும் விநியோகம் செய்யப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வீட்டு பயன்பாட்டு சிலிண்டர்கள் விலை ரூ.60 உயர்ந்து ரூ.928 ஆகி உள்ளது.
சந்தையில் செயற்கையான தட்டுப்பாடு உருவாகும் அபாயம் உள்ளது
சந்தையில் ஒரு செயற்கையான தட்டுப்பாடு (Artificial Shortage) உருவாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தீவிரமான தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்திகள் வேகமாக பரவி வருவதால் தேவைக்கு முன்னதாகவே மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முற்படுகின்றனர். உண்மையில் தற்போது தட்டுப்பாடு அதிகம் இல்லாத நிலையில் இது விநியோக நடவடிக்கையில் தேவையற்ற நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இதனால் சந்தையில் ‘செயற்கையான தட்டுப்பாடு’ உருவாகும் அபாயம் உள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் தேவைப்படும்போது மட்டும் சிலிண்டர் முன்பதிவு (LPG Shortage News) செய்ய முற்பட வேண்டும் எனவும் மேலும் பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என சிலிண்டர் விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க விநியோகத்தில் சிறு மாற்றங்கள் இருக்கலாம் (LPG Shortage News)
சர்வதேச போர் சூழலால் பொதுமக்களுக்கு தேவையான சிலிண்டர் விநியோகத்தை ஊக்குவிக்கும் மற்றும் நடைமுறைப்படுத்தும் அளவிற்கு விநியோகத்தில் சிறு மாற்றங்கள் இருக்கலாம் என கூறுகின்றனர். எனவே, பொதுமக்கள் பதற்றமடைந்து முன்கூட்டியே முன்பதிவு செய்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க எடுத்துள்ள நடவடிக்கைகள்
இந்திய அரசு எரிசக்தி தட்டுப்பாட்டை சமாளிக்க எண்ணெய் அமைச்சகம் தலைமையில் (LPG Shortage News) அவசர உற்பத்தி அதிகரிப்பு மற்றும் நீண்டகால உற்பத்தி அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
- LPG உற்பத்திக்கு மட்டும் propane, butane வாயுக்களை பயன்படுத்த ரிஃபைனரிகள் (IOC, BPCL, HPCL) மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளன.
விநியோகம் கட்டுப்படுத்தல், அவசரகால சக்திகள் (Essential Commodities Act) மூலம் விநியோகம் கட்டுப்படுத்தலை மேற்கொண்டுள்ளன.
உணவகங்களின் தற்காலிக நடவடிக்கைகள்
சமையல் கேஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் தங்களது சேவைகளை முழுமையாக நிறுத்தாமல் சில தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
- உணவு மெனு பட்டியல் ஆனது அத்தியாவசிய உணவுப் பொருட்களை மட்டும் கவனத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
- 350 வகையான உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த உணவகங்கள், தற்போது ஏற்பட்டுள்ள கேஸ் தட்டுப்பாட்டால் 100 வகையான உணவு வகைகள் மட்டுமே விற்பனை செய்கின்றன.