லண்டனில் 18/11/2023 சனிக்கிழமையன்று நடந்த Sotheby’s-ன் ஏலத்தில் Macallan 1926 ஸ்காட்ச் விஸ்கி ஆனது கிட்டத்தட்ட 2.2 மில்லியன் பவுண்டுகள் ($2.7 மில்லியன்) பெற்று சாதனை படைத்த விற்பனையை அடைந்தது. இந்த $2.7 மில்லியன் ஆனது விற்பனைக்கு முந்தைய குறைந்த மதிப்பான $934,274 – $1.4 மில்லியனை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகம் ஆகும். இந்த பரிவர்த்தனை ஆனது புதிய ஏல சாதனையை படைத்துள்ளது. பாட்டில் இத்தாலிய கலைஞரான வலேரியோ அடாமி வடிவமைத்த லேபிளால் வேறுபடுகிறது. தொடர்ந்து மூன்று முறை ஏலத்தில் ஒரு பாட்டில் ஒயின் அல்லது ஸ்பிரிட்களுக்கான உலக சாதனையை Macallan 1926 ஸ்காட்ச் விஸ்கி ஆனது முறியடித்து உள்ளது.
- 2018 ஆம் ஆண்டில், Sotheby’s விஸ்கியின் ஒரு பாட்டிலை விற்றது. இது ஏலத்தில் £1 மில்லியனைத் தாண்டிய முதல் விஸ்கி பாட்டில் ஆகும்.
- 2019 இல் Sotheby’s கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. இது 18/11/2023 சனிக்கிழமை வரை ஒயின் அல்லது ஸ்பிரிட்களுக்கான ஒரு சாதனையாக இருந்து வந்துள்ளது.
- தற்போது அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி $2.7 மில்லியனுக்கு சென்றுள்ளது.
1926 ஆம் ஆண்டை சேர்ந்த இந்த விஸ்கி ஆனது தயாரிப்பாளர்களின் கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். உலகில் “மிகவும் விரும்பப்படும்” விஸ்கி மற்றும் உலகின் மிகவும் மதிப்புமிக்க விஸ்கி என்று நிபுணர்களால் விவரிக்கப்படும். இந்த விஸ்கி ஆனது இதுவரை தயாரிக்கப்பட்ட மிகப் பழமையான விண்டேஜ் விஸ்கி ஆகும். இது இதன் மதிப்பை இன்னும் அதிகப்படுத்துகிறது.
மில்லியன் கணக்கான பணத்தை இந்த ஒரு பாட்டில் ஃபைன் ஸ்காட்ச்சிற்காக கொடுக்க உலகின் பணக்கார ஸ்காட்ச் பிரியர்கள் தயாராக இருக்கிறார்கள். 97 வருடங்கள் பழமையான இந்த சிங்கிள் மால்ட்டின் திறப்பை அனுபவிப்பது மிகவும் சிறப்பான தருணம் என்று நம்புகிறார்கள். பெரும் செல்வந்தர்களிடையே ஒரு வெறி ஆனது ஏற்படுகிறது. ஏலத்தில் இந்த பாட்டில்களின் விலை ஆனது படிப்படியாக உயர்ந்து வருகிறது. 97 வருடங்கள் பழமையான இந்த சிங்கிள் மால்ட்டின் திறப்பை அனுபவிப்பது மிகவும் சிறப்பான தருணம் என்று பெரும் செல்வந்தர்கள் நம்புகிறார்கள்.
Macallan - Sotheby's Global Head Of Spirits, Jonny Fowle-இன் அறிக்கை :
“The Macallan 1926 ஆனது ஒவ்வொரு ஏலதாரரும் விற்க விரும்பும் மற்றும் ஒவ்வொரு சேகரிப்பாளரும் சொந்தமாக வைத்திருக்க விரும்பும் ஒரு விஸ்கி ஆகும் என்றும் The Macallan 1926-ன் இந்த சாதனை ஆனது தொழில்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது” என்று Jonny Fowle தெரிவித்தார். 1926 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட மக்கலன் தொகுதி ஆனது 60 வருடங்கள் கழித்து 1986 இல் வரையப்பட்ட 40 பாட்டில்களில், அதிகபட்சம் 14 ஐகானிக் ஃபைன் மற்றும் அரிய லேபிள்களால் அலங்கரிக்கப்பட்டன. 37 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலில் பாட்டில் செய்யப்பட்ட 97 வருடங்கள் பழமையான இந்த சிங்கிள் மால்ட்டின் திறப்பை அனுபவிப்பது மிகவும் சிறப்பான தருணம் என்றார்.
“நல்ல மற்றும் அரிதான” முத்திரையுடன் கூடிய இத்தாலிய ஓவியர் வலேரியோ அடாமி வடிவமைத்த தனித்துவமான லேபிள்களைக் Macallan 1926 ஸ்காட்ச் பாட்டில் கொண்டுள்ளது. மேலும் அவர், “$934,274 மற்றும் $1.4 மில்லியனுக்கு இடையில் விற்கப்படும் என்று எதிர்பார்த்த Macallan 1926 ஏல நிறுவனத்தின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் தாண்டி $2.7 மில்லியனுக்கு சென்றது தொழில்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது” என்றார்.
டிஸ்டில்லரி மூலம் மறுசீரமைப்பு :
18/11/2023 சனிக்கிழமை விற்கப்பட்ட பாட்டில் ஆனது ஏலத்திற்கு முன்னதாக டிஸ்டில்லரி மூலம் மறுசீரமைக்கப்பட்டது. டிஸ்டில்லரி மூலம் மறுசீரமைப்பு செயல்முறையானது காப்ஸ்யூல் மற்றும் கார்க் இரண்டையும் மாற்றுவது, பாட்டில் லேபிள்களின் மூலைகளில் புதிய பசையைப் பயன்படுத்துவது ஆகும். மேலும் கிளாஸ்கோவில் உள்ள எட்ரிங்டன் அலுவலகங்களில் சோதனை செய்ய 1ml திரவ மாதிரியை பாட்டிலில் இருந்து எடுத்தது.
ஏலத்தில் விடப்படுவதற்கு முன்னதாக 40 பாட்டில்களில் ஒன்று திறக்கப்பட்டு நுகரப்பட்டது :
ஏலத்திற்கு முன்னதாக, விஸ்கியின் சிறிய மாதிரியை சோதித்த ஃபோல், “நான் ஒரு சிறிய துளியை சுவைத்தேன். மக்கள் எதிர்பார்ப்பது போல் அது நிறைய உலர்ந்த பழங்கள், நிறைய மசாலா மற்றும் நிறைய மரங்கள் நிறைந்து மிகவும் செழுமையாக இருந்தது” என்று AFP இடம் கூறினார்.