Madharaasi Review : சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் திரை விமர்சனம்
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது மதராஸி திரைப்படம். அமரன் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இப்படம் வெளியாகி இருப்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ‘மதராஸி’ படத்தின் சிறப்பு காட்சிகள் முடிந்து படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவான விமர்சனங்கள் (Madharaasi Review) வர தொடங்கியுள்ளன. தற்போது இந்த பதிவில் மதராஸி படத்தின் திரை விமர்சனத்தை பார்க்கலாம்.
மதராஸி படம் எப்படி இருக்கு (Madharaasi Review)
மதராஸி திரைப்படம் சிறப்பு காட்சியாக இன்று காலை 9 மணிக்கு தியேட்டரில் வெளியானது. படத்தை பார்த்த ரசிகர்கள் இணையத்தில் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். படம் பார்த்த ரசிகர் ஒருவர், படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் ஏற்ற இறக்கங்கள் கலந்துள்ளதாகவும் ஆனால், படம் முழுக்க அதிரடியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மற்றொரு ரசிகர் படத்தின் அறிமுகம் சிறப்பாக உள்ளதாகவும், வித்யுத் ஜமால் வில்லன் ரோலில் சிறப்பாக நடித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும் அதிரடி சண்டை காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்த மதராஸி படம் நல்ல விருந்தாக இருக்கும். படம் இந்த ஆண்டின் ஒரு நல்லபொழுதுபோக்கு திரைப்படமாக அமையும் என பதிவிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனுக்கு குவியும் பாராட்டு
மதராஸி படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு பாதிப்பு உள்ளது. அந்த பாதிப்பின் அடிப்படையில் வரும் ஆக்சன் காட்சிகள் சிறப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒரு நெட்டிசன் மதராஸி படத்தில் சிவகார்த்திகேயன் (Madharaasi Review) எதிர்பாராத அளவில், நேர்த்தியான படைப்பையும் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருப்பதாக தெரிவித்தார். மற்றொருவர், நான் படத்திற்கு சாதாரணமாக சென்றேன், ஆனால் படம் முடிந்து வெளியே வரும்போது முற்றிலும் கலங்கிப் போனதாக தெரிவித்துள்ளார். மேலும் அனிரூத் இசை மதராஸி படத்தின் மொத்த கதை களத்தையும், வேறு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக நெட்டிசன்கள் கூறி உள்ளனர். ஒட்டுமொத்தமாக மதராஸி படத்தைபார்க்கும் போது, படம் மிகவும் ஈர்க்கக்கூடியதாகவும், பொழுதுபோக்கு அம்சமாக இருப்பதாகவும், ஏ.ஆர்.முருகதாஸின் ‘கம்பேக் படம்’ என பதிவிட்டு வருகின்றனர்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!