Madras High Court Recruitment : சென்னை உயர் நீதிமன்றத்தில் 50 ஆயிரம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும்?
சென்னை ஐகோர்ட்டில் சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது 03.12.2025 அன்று வெளியாகி உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் மொத்தம் 28 சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட (Madras High Court Recruitment) உள்ளன. இந்த பணியிடங்கள் ரூ.50000 சம்பளத்தில் தற்காலிக நியமன அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட முழு விபரங்கள் (Madras High Court Recruitment)
இந்த சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி உள்ளிட்ட முழு விபரங்கள் பின்வருமாறு.
தேவையான கல்வி தகுதி
சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பதாரர் இளநிலை சட்டப்படிப்பு படித்து முடித்தவராக இருக்க வேண்டும். மேலும் பார் கவுன்சிலில் மெம்பெராக அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
வயது வரம்பு
சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான வயது வரம்பு ஆனது 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று நிர்ணயக்கப்பட்டுள்ளது.
சம்பளம்
சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான மாதச் சம்பளம் ரூ.50,000/-ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை
இந்தப் சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை மொத்தம் 28 ஆகும்.
தேர்வு முறை
இந்தப் சட்ட ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் முறை
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் https://hcmadras.tn.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனைப் பயன்படுத்த வேண்டும். இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் விண்ணப்பத்தினை அனுப்ப வேண்டும்.
முகவரி விவரம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி
The Registrar General,
High Court,
Madras – 600104.
Mail ID முகவரி – mhclawclerkrec@gmail.com
விண்ணப்பிக்க கடைசி நாள் – 15.12.2025
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!