Madurai Cricket Stadium: மதுரையில் கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்துவைக்கும் எம்எஸ் தோனி..!
மதுரையில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் ஸ்டேடியத்தை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நாளை (அக்டோபர் 9) (Madurai Cricket Stadium) திறந்துவைக்க உள்ளார். சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது மதுரை மாநகராட்சியின் வளர்ச்சி குறைந்த அளவிலேயே உள்ளது. இதற்கு காரணம் மதுரையில் அதிகளவிலான தொழில்கள், ஆலைகள், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மதுரையில் அடுத்தக்கட்ட வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு உதாரணமாக மதுரையில் டைடல் பார்க் (Tidel Park) பணிகள் தொடங்கவுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட பணி வரும் ஜனவரி மாதம் முடிவடைய உள்ளது.
இதனிடையே மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களின் கிரிக்கெட் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், மதுரை சிந்தாமணி ரிங்ரோடு பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் மருத்துவமனை வளாகத்தில், கிரிக்கெட் ஸ்டேடியம் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 2வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம்
சென்னை சேப்பாக்ககத்தில் அமைந்துள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமாக இந்த வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மைதானத்தில் ஒரே சமயத்தில் 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் இருக்கைகள் கொண்ட வசதி, இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, அவர்களுக்கான ஜிம் வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை வசதி, கார் மற்றும் பைக் பார்க்கிங் என பல்வேறு (Madurai Cricket Stadium) வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூர் சின்னசாமி மைதானத்தை போல் மழை பெய்தாலும் ஆட்டம் விரைவில் தொடங்கும் வகையில் மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரூ.36 கோடி செலவில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து மைதானத்தின் லைட்ஸ் அமைக்கப்பட்டுள்ளது.
எம்எஸ் தோனி திறந்து வைக்கிறார் (Madurai Cricket Stadium)
இந்த வேலம்மாள் மைதானத்தை நாளை அக்டோபர் 9-ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி அவர்கள் திறந்து வைக்க உள்ளார். அதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் மதுரையில் உள்ள இந்த மைதானத்தில் வரும் ஆண்டுகளில் டிஎன்பிஎல், ஐபிஎல் மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகள் நடத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதுரை கிரிக்கெட் வீரர்கள் கூறியுள்ளதாவது, திண்டுக்கல், திருநெல்வேலி மாவட்டங்களில் டிஎன்பிஎல் போட்டிகள் நடத்துவதற்கு சிறிய மைதானங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் மதுரையில் தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தின் மூலமாக இனி இங்கேயும் ஐபிஎல் போன்ற போட்டிகளை (Madurai Cricket Stadium) நடத்த வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், எதிர்கால கிரிக்கெட் வீரர்களுக்கு இந்த மைதானம் பெரிய வாய்ப்பாக அமையும் என தெரிவித்தனர். தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரில் பார்க்க சென்னை மற்றும் பெங்களூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்த நிலையில், இனிமேல் மதுரையிலும் பார்க்கலாம் என்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!