Gistak Media

Magalir Urimai Thogai 2000 : மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக உயர்வு.. மகளிருக்கு இரட்டை சர்ப்ரைஸ் தந்த முதல்வர்.!

பெண்களின் பொருளாதார நிலையை வலுப்படுத்தும் நோக்கத்தில் தமிழக அரசின் முக்கிய நலத்திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் (Magalir Urimai Thogai 2000) வழங்கப்படும் தொகை ரூ.1000 இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தோற்றம்

குடும்பத் தலைவி பெண்களின் பொருளாதார நிலையில் ஒரு சுயநிறைவை தரவும், குடும்பச் செலவுகளை சமாளிக்க உதவவும், கடன் சுமைகளில் இருந்து விடுபடவும், குழந்தைகள் கல்விக்கு உதவவும், மற்றும் மருத்துவ, சுகாதார செலவுகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தோடு 2023ஆம் ஆண்டு ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’ தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் உள்ள குடும்பத் தலைவி பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் விதத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடங்கப்பட்டது.

“இரட்டை சர்ப்ரைஸ்” என வரவேற்கப்படும் தமிழக அரசின் அறிவிப்பு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழக மகளிருக்கு இரட்டை சர்ப்ரைஸ் தந்துள்ளார். முதல்வர் மு.க. ஸ்டாலின் தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் தொகை ரூ.1000 இருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட இருப்பதாகவும், மேலும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மொத்த உரிமைத் தொகை ரூ.3,000-மும் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகை ரூ.2,000-மும் சேர்த்து ரூ.5000 பிப்ரவரி 12 அன்று வங்கிக் கணக்குகளில் (Magalir Urimai Thogai 2000) செலுத்தப்படுகிறது என அறிவித்துள்ளார்.

Magalir Urimai Thogai 2000 - Gistakmedia

உரிமைத்தொகை முடக்கப்படாமல் தடுக்கும் நடவடிக்கை (Magalir Urimai Thogai 2000)

தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மகளிர் உரிமைத்தொகையை தமிழக மகளிருக்கு வழங்கப்பட விடாமல் முடக்கப்படலாம் என்பதால் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.5000 பிப்ரவரி 12 அன்று வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது என முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். யார் தடை ஏற்படுத்தினாலும் மகளிர் உரிமைத் தொகையை வழங்குவதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மாபெரும் மாற்றம் காணும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்

தற்போது பெண்களின் குடும்பச் செலவுத்திறன் மற்றும் சமூக மரியாதையை சிறப்பாக உயர்த்தும் நோக்கத்தோடு மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000-லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்பட உள்ளது. இது ஒரு முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும் பல பெண்கள் பயன் பெறும் (Magalir Urimai Thogai 2000) விதத்தில் தகுதி விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் மூலம் முன்பு தவறவிடப்பட்ட பெண் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மீண்டும் பரிசீலனை செய்யப்படும், தனித் தலைவி பெண்களின் (Single women) விண்ணப்பங்கள் சேர்க்கப்படும், விதவை & விவாகரத்து பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தனிச்சலுகைகள் வழங்கப்படும். இது மாநில அரசு சமூக நல செலவில் கொண்டுள்ள பெரும் ஈடுபாட்டைக் காட்டுகிறது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top