Major Changes In Cibil Score : வங்கிகளில் முதல்முறை கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவிப்பு
வங்கிகளில் முதல்முறை கடன் பெறுவதற்கு குறைந்தபட்ச ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயமில்லை என மத்திய அரசு (Major Changes In Cibil Score) அறிவித்துள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியும் (RBI) கடன் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் கட்டாயப்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி அவர்கள் வெளியிட்ட அறிவிப்பின்படி, வங்கிகள் ஒருவர் முதல்முறை கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் சிபில் ஸ்கோர் குறைவாகவோ அல்லது பூஜ்ஜியமாகவோ இருந்தால் நிராகரிக்க கூடாது எனவும், மேலும் அவர் ஏற்கனவே கடன் வாங்கியவராக இருந்தால் நிராகரிக்கலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை கடன் வாங்காமால் இருந்தால் கடன் வழங்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டை பங்கஜ் சௌத்ரி உறுதிப்படுத்தினார்.
சிபில் மதிப்பெண் (Major Changes In Cibil Score)
சிபில் ஸ்கோர் என்பது உங்கள் கடன் வரலாற்றின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஒரு 3 இலக்க எண் ஆகும். இது பொதுவாக எல்லோருக்கும் 300 முதல் 900 வரை இருக்கும். மேலும் இதனை இந்திய கடன் தகவல் பணியகம் (CIBIL) வழங்குகிறது. மேலும் அதிக மதிப்பெண் உங்களின் கடன் பெறும் தகுதியை அதிகரிக்கிறது, அதே சமயத்தில் குறைந்த சிபில் ஸ்கோர் உங்களின் கடன் ஆபத்தைக் குறிக்கிறது.
வங்கிகளில் முதல்முறை கடன் வாங்குபவர்களுக்கு எந்த கடன் வரலாறும் இல்லை என்ற காரணத்தினால் அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்க கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் தங்களின் சிபில் மதிப்பெண் குறைந்துள்ளதாக புகார் அளித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆர்பிஐ கிரெடிட் ஸ்கோரில் செய்யப்பட்ட சில மாற்றங்களே ஆகும். இதனால் முன்பு போல எளிதாக எந்த லோனும் பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.
ஆர்பிஐ விதிகள்
ஆர்பிஐ புதிய விதியின்படி இனி வங்கிகள் சிபில் ஸ்கோர் அறிக்கையை 30 நாட்களுக்கு ஒரு முறைக்கு பதிலாக 15 நாட்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என கடந்த ஜனவரி 1, 2025-ம் ஆண்டு அறிவித்தது. இதனால் சிபில் ஸ்கோர் குறைவாக இருப்பதால் மக்கள் கடன் பெற முடியாமல் (Major Changes In Cibil Score) அவதிப்படுகிறார்கள். இதைத்தொடர்ந்து முதல்முறை வங்கிக்கடன் பெறுவதற்கு ‘சிபில் ஸ்கோர்’ கட்டாயம் இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் கடன் பெறும் விண்ணப்பங்களுக்கு குறைந்தபட்ச சிபில் ஸ்கோரை இதுவரை ரிசர்வ் வங்கி அறிவிக்கவில்லை.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!