-
IPL 2026 Starts 28th March : மார்ச் 28 முதல் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
-
LPG Shortage News : நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு.. கொரோனா ஊரடங்கு போன்று மாறும்சூழல்?
-
Chennai Real Estate Market 2026 : 2026-ல் சென்னை ரியல் எஸ்டேட் சந்தை 5%–7% வரை வளர்ச்சி காணும் என கணிப்பு.!
மாமன்னன் படத்தின் டப்பிங்கை தொடங்கிய வடிவேலு…
வடிவேலு நடிப்பில் உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் உருவாகியுள்ள மாமன்னன் படத்தின் டப்பிங் (Mamannan Dubbing) பணியை வடிவேலு தொடங்கியுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலு, சுராஜ் இயக்கிய நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். பல வருடங்களுக்குப் பிறகு படத்தில் வடிவேலு நடிக்கிறார் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருந்தது. ஆனால் படத்தின் கதை மோசமாக இருந்ததால் படம் தோல்வியடைந்தது.
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திற்கு பிறகு வடிவேலு ‘மாமன்னன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி புத்தாண்டில் வெளியாகும் வாய்ப்பு உள்ளது. மாமன்னன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்திற்காக இயக்குனர் மாரி செல்வராஜுடன் நடிகர் வடிவேலு ‘மாமன்னன்’ படத்திற்கு டப்பிங் (Mamannan Dubbing) பேசிய புகைப்படம் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த டப்பிங் (Mamannan Dubbing) புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் பெற்று வருகிறது. இந்த படத்தில் உதயநிதியின் அப்பாவாக வடிவேலு நடித்திருந்தார்.
பா.இரஞ்சித் தயாரித்த பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். முதல் படத்திலேயே வெற்றி பெற்ற இவர், அடுத்து தனுஷுடன் இணைந்து கர்ணன் படத்தை இயக்கினார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றதால் ‘மாமன்னன்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.








