Maniratnam's Review of Aadujeevidam Movie : ஆடுஜீவிதம் படம் குறித்து மணிரத்தினம் விமர்சனம்
இயக்குனர் பிளெஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ஆடுஜீவிதம் படத்தை நேற்று கமல்ஹாசனுடன் இயக்குனர் மணிரத்னம் Maniratnam’s Review of Aadujeevidam Movie பார்த்து ரசித்தார். நேற்று கமல்ஹாசனின் விமர்சன வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்த நிலையில், படத்தை பார்த்துவிட்டு தக் லைஃப் இயக்குனர் மணிரத்னம் என்ன சொன்னார் என்ற வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். சுமார் 16 வருடங்கள் ஒரு படத்திற்காக உடல் பொருள் ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து ஒரு படைப்பை உருவாக்க முடியும் என்றால், அதை இந்தியாவிலும் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளார் பிருத்விராஜ். சில வருடங்கள் படத்தை கிடப்பில் கிடந்தாலே அந்த படம் வெளியாகும் போது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறாது. ஆனால், பல வருடங்களுக்குப் பிறகும் இந்தப் படம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு இந்த படத்திற்காக பிருத்விராஜ் 2 அல்லது 3 வருடங்கள் உழைத்திருப்பார் என நினைத்த அக்ஷய் குமாரிடம் 16 வருடங்கள் உழைத்திருக்கிறேன் என பிருத்விராஜ் சொன்னதும் ஷாக் ஆகிவிட்டார். இந்த படத்தின் கதை 2010 ஆம் ஆண்டு உருவானது என்றும் இந்த படம் மலையாளத்தில் ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்ட சர்வைவர் த்ரில்லராக உருவாகி பல விருதுகளை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடுஜீவிதம் கதை
மஞ்சுமெல் பாய்ஸ் போல குணா குகையில் விழும் சுபாஷை மீட்க அவனது நண்பன் குட்டன் எப்படி ரிஸ்க் எடுத்து மீட்கும் த்ரில்லர் படமான மஞ்சுமெல் பாய்ஸ், மலையாளத்தில் வெளியாகி 200 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோலவே, பாலைவனத்தில் தொலைந்து போகும் ஒருவன், பல நாட்கள் எப்படி தண்ணீருக்காகப் போராடி, கடைசியில் எப்படி உயிர் பிழைத்து பாலைவனத்தில் இருந்து தப்பிக்கிறான் என்பதை இந்தப் படத்தின் கதையாகும்.
மணிரத்தினம் விமர்சனம் (Maniratnam's Review of Aadujeevidam Movie)
கமல்ஹாசன் படத்தை பார்த்து பாராட்டிய நிலையில், அவருடன் அமர்ந்து ஸ்பெஷல் பிரிமியர் ஷோவைப் பார்த்த இயக்குநர் மணிரத்னம் அமேஸிங் என்று பாராட்டியுள்ளார். இதை எப்படி இந்த டீமால் சாத்தியப்படுத்த முடிந்தது என்று புரியவில்லை என்றும், பிருத்விராஜின் உழைப்பை ரசிகர்கள் ஒவ்வொரு பிரேமிலும் தெளிவாக பார்க்க முடியும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ஒவ்வொரு பிரேமின் அழகும் தனி அழகு என்று படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார். பிளெஸ்ஸி இயக்கத்தில் பிருத்விராஜ், அமலா பால் நடித்துள்ள ஆடுஜீவிதம் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் மலையாளம், தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. அதன் டிக்கெட் முன்பதிவு திறக்கப்பட்டுள்ளது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!