Margazhi Thingal Teaser - மார்கழி திங்கள் படத்தின் டீசர் வெளியீடு
மனோஜ் பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ படத்தின் டீசரை (Margazhi Thingal Teaser) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாரதிராஜா இயக்கிய ‘தாஜ்மஹால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அதன்பிறகு அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம், ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இவர் சமீபத்தில் சிம்பு நடித்த ‘மாநாடு’ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகராக இருந்த மனோஜ் பாரதிராஜா ‘மார்கழி திங்கள்’ படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. புது முகங்கள் நடிக்கும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் (Margazhi Thingal Teaser) வெளியாகியுள்ளது.
Margazhi Thingal Teaser :
1.17 நிமிடம் ஓடும் இந்த டீசரில் இரண்டு பள்ளி மாணவர்களை காதலிக்கும் கதையை மையமாக வைத்து டீசர் (Margazhi Thingal Teaser) வெளியாகியுள்ளது. இதில் மூன்றாவது பின்னணி இசையால் இதம் சேர்கிறார் இளையராஜா, மேலும் இவரின் இசையில் பின்னணியில் ஒலிக்கும் கோராஸ் கவனம் ஈர்க்கிறது. பெண் தனது தாத்தாவிடம் காதலை பற்றி கூற போகிறேன் என்று அவளின் காதலனிடம் சொல்கிறாள், அவளுடைய காதலன் அந்த யோசனையை நிராகரித்து, அவ்வாறு செய்ய வேண்டாம் என்று அவளிடம் சொல்கிறான். கடைசி சில நொடிகளில் அந்த பெண் தன் தாத்தாவிடம் ரகசியத்தை வெளிப்படுத்துகிறாள். இறுதியில் பாரதிராஜா வெளிப்படுத்தும் ரியாக்ஷன் காதலுக்கு எதிரியாக இருப்பார் என்பதை உணர்த்துகிறது. டீசர் (Margazhi Thingal Teaser) தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!