Margazhi Thingal Trailer : மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் வெளியீடு
நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகும் மார்கழி திங்கள் படத்தின் டிரைலர் (Margazhi Thingal Trailer) தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் மார்கழி திங்கள். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் மனோஜ் பாரதிராஜா. புதுமுகங்களை வைத்து உருவாகும் இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் சுசீந்திரன் தயாரித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் நடிக்கும் பாரதிராஜா வழக்கம் போல் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் தொடங்கிய நிலையில், பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி நாட்களில் நடக்கும் காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் செப்டம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் (Margazhi Thingal Trailer) வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
Margazhi Thingal Trailer :
வழக்கமான காதல் கதையை மனோஜ் இயக்கி இருந்தாலும், இந்தப் படத்தின் மூலம் புதுமையான கருத்தை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொதுவாக, வேறு ஜாதியில் திருமணம் செய்து கொள்வதை பலர் எதிர்க்கிறார்கள். ஆனால் ஒரே ஜாதியில் கூட அந்தஸ்து, தலைக்கட்டு போன்றவற்றால் காதலுக்கு வரும் பிரச்சினைகளை டிரைலர் (Margazhi Thingal Trailer) தெரிவிக்கிறது. மேலும் இப்படத்தின் மூலம் ஷியாம் செல்வன் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரக்ஷனா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் சுசீந்திரன், அப்புக்குட்டி, சர்மிளா, கோவை சாவித்திரி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் டிரைலர் (Margazhi Thingal Trailer) வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!