Gistak Media – Cinema News | Trending News | Latest News

Mark Review : கிச்சா சுதீப் நடித்துள்ள ‘மார்க்’ படத்தின் திரை விமர்சனம்..!

கிச்சா சுதீப் நடிப்பில் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகியுள்ள ‘மார்க்’ படம் ஒரு உயர் அதிரடி போலீஸ் திரில் (Mark Review) திரைப்படமாகும். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி குழந்தைகளை கடத்திய கும்பலை துரத்தும் கதை ஆகும். கிச்சா சுதீப்பின் 47வது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

'மார்க்' இயக்குநர் விஜய் கார்த்திகேயாவின் இரண்டாவது படம்

கடந்த ஆண்டு வெற்றி பெற்ற ‘மேக்ஸ்’ படத்தை இயக்கிய விஜய் கார்த்திகேயாவின் இரண்டாவது படம் இந்த ‘மார்க்’ படம் ஆகும். விஜய் கார்த்திகேயா இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் கிச்சா சுதீப், நவீன் சந்திரா, ஷைன் டாம் சாக்கோ, யோகி பாபு, கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, அர்ச்சனா கொட்டிகே, ரோஷினி பிரகாஷ், தீபஷிகா மற்றும் பிரதாப் நாராயணன் ஆகியோர் நடித்துள்ளனர். அஜனீஷ் லோகநாத்  இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஷேகர் சந்த்ரா செய்துள்ளார். இந்தப் படத்தை கிச்சா கிரியேஷன்ஸ் மற்றும் சத்ய ஜோதி பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

எதிரிகளை அழிப்பதே வாழ்க்கை நெறி

இந்த படத்தின் கதாநாயகன் அஜய் மார்கண்டேயா (மார்க்) 18 மணி நேரத்தில் 18 குழந்தைகளை எப்படி காப்பாற்றுகிறார் என்பதே மார்க் படத்தின் கதை. இந்த ‘மார்க்’ படம் கொல்ஹாபூரில் நடக்கும் ஒரு கொடூரமான கொலை சம்பவத்துடன் (Mark Review) தொடங்குகிறது. போலீஸ் அதிகாரியான (SP) அஜய் மார்கண்டேயா (மார்க்) ஊழல் அரசியல்வாதிகள், குழந்தைகள் கடத்தல், டிரக் மன்னன் பத்ராவின் பழிவாங்கல் என பல வழக்குகளில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும் வில்லன்களுக்கு எமனாக செயல்பட்டு வெற்றி பெறுகிறார். தீய சக்திகளை எதிர்ப்பது மற்றும் அழிப்பதே போலீஸ் அதிகாரியான (SP) அஜய் மார்கண்டேயாவின் வாழ்க்கை நெறி ஆகும். இதுவே இந்த படத்தின் மூலக் கரு ஆகும்.

'மார்க்' படத்தின் பலங்கள் (Mark Review)

  • கிச்சா சுதீப் போலீஸ் அதிகாரி SP அஜய் மார்கண்டேயாவாக தனது ஸ்வாக், இன்டென்சிட்டி, ஆக்ஷன் சீன்களில் ஆதிக்கம் என தூள் செலுத்துகிறார். இவரது ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் படத்தின் முக்கிய பலமாக அமைந்துள்ளது.
  • படத்தில் யோகி பாபுவின் காமெடி காட்சிகள் நல்ல நகைச்சுவையை வழங்குகிறது.
  • ஷேகர் சந்த்ராவின் ஒளிப்பதிவும் மற்றும் அஜனீஷ் லோகநாத்தின் பின்னணி இசையும் படத்தின் வெற்றிக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
Mark Review - Gistakmedia

'மார்க்' படத்தின் வசூல் வேட்டை

டிசம்பர் 25-ல் வெளியான இந்தப் படம்  நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. முதல் நாளில் ரூ.8.6 கோடி, 2-ம் நாளில் 3.5 கோடி, 4 நாட்களில் ரூ.18.5 கோடி சம்பாதித்து 4 நாட்களில் 18.5 கோடி உள்ளது.

'மார்க்' படம் மாறுபட்ட விமர்சனங்களை பெற்றுள்ளது

  • இது ஒரு சுமாரான த்ரில்லர் படம்.
  • இதன் கதை சரியாக எழுதப்படவில்லை.
  • இந்தப் படத்தின் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது.
  • இந்தப் படத்தின் சில காட்சிகளில் லாஜிக் மீறல்கள் உள்ளன.
  • இந்தப் படத்தின் முதல் பாதி குழப்பமானது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top