Mask Movie Review : விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் த்ரில்லரா இந்த 'மாஸ்க்'?
விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவின், ஆண்ட்ரியா நடிப்பில் ‘மாஸ்க்’ திரைப்படம் இன்று (Mask Movie Review) வெளியாகி உள்ளது. இது ஒரு விறுவிறுப்பான ஹெய்ஸ்ட் த்ரில்லர் திரைப்படம் ஆகும். இது ஒரு சமூக அரசியல் பின்னணியைக் கொண்டுள்ளது.
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்கின் மாஸ்க்
ரசிகர்களை தியேட்டரை நோக்கி கண்டிப்பாக வரவழைக்கும் அனைத்து அம்சங்களையும் இந்தப் படம் கொண்டிருக்கிறது. டார்க் ஹியூமர் காட்சிகளும் மற்றும் காமெடிகளும் இந்தப் படத்தில் பக்காவாக இடம் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பவன், சார்லி, ருஹானி, அர்ச்சனா, சுப்ரமணியம் சிவா, கல்லூரி வினோத மற்றும் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர். ஆர் டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். விகர்ணன் அசோக் இயக்கத்தில் கவினின் நடிப்பில் உருவான மாஸ்க் ரூபாய் 440 கோடி கொள்ளைப் படம் வொர்த்தா?
மாஸ்க் படத்தின் கதை (Mask Movie Review)
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இந்த ‘மாஸ்க்’ கதையை விறுவிறுப்பாக சொல்ல முயன்றிருக்கிறார். அனைத்திலும் ஒரு எதிக்ஸ் (ethics) மற்றும் லாபம் எதிர்பார்க்கும் ஹீரோவாக கவினும், கெடுதல் செய்வதிலும் ஒரு லிமிட் வைத்திருக்கும் வில்லியாக ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர். இப்படிப்பட்ட ஹீரோ மற்றும் வில்லியின் வாழ்க்கை ஆனது ஒரு கொள்ளையினால் எப்படி எல்லாம் மாறுகிறது என்பதையே இந்த படம் சித்தரிக்கிறது.
ஹீரோ மற்றும் வில்லியின் திட்டம் கைகூடியதா?
தனியார் துப்பறிவு நிறுவனம் நடத்தி வரும் ஹீரோ வேலு (கவின்), சில குறுக்கு வழிகள் மூலமாக பெரிய லாபம் சம்பாதிக்க நினைத்து அதனை நோக்கி சாதுர்யமாக காய் நகர்த்துபவராக செயல்படுகிறார். ஹீரோ வேலு (கவின்) வரும் தேர்தலில் அரசியல் கட்சித் தலைவரான மணிவண்ணன் (பவன்) தனித்துப் (Mask Movie Review) போட்டியிட்டு வெற்றி பெற ஓட்டு போட சுமார் 440 கோடி பணத்தை மக்களுக்கு பட்டுவாடா பண்ணுவதற்கு முடிவு செய்கிறான். சுமார் 440 கோடி பணத்தை பதுக்கி வைத்து பட்டுவாடா பண்ணுவதற்கு வில்லி பூமி (ஆண்ட்ரியா) உதவியை நாடுகிறான். வில்லி பூமியின் சூப்பர் மார்க்கெட்டில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு பட்டுவாடா செய்வதற்கு தயாரான நிலையில் அந்தப் பணமானது எம்.ஆர்.ராதா மாஸ்க் அணிந்த ஒரு கூட்டத்தால் திருடப்படுகிறது.
இது ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர் படம்
ஒரு சுவாரஸ்யமான ஹெய்ஸ்ட் படத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களும் இந்தப் படத்தில் இருந்தபோதும் அதனை சொன்ன விதமானது படத்தை மிகவும் சுவாரஸ்யம் அற்றதாக மாற்றி உள்ளது. இந்தப் படத்தின் ஹீரோவாக கவின் கதாபாத்திரத்தின் நோக்கம் என்ன? ஹீரோ கவின் இந்தக் கதைக்குள் செய்வது என்ன? என்பனவற்றில் எந்த விதமான அழுத்தமோ மற்றும் தெளிவோ இல்லை. மைய கதாபாத்திரங்களான ஹீரோ கவின் மற்றும் வில்லி ஆண்ட்ரியா ஆகிய இருவரின் பாத்திரங்களை விவரித்த அளவு அவர்களின் தேவை என்பது என்ன? என தெளிவாக சொல்லப்படவில்லை. இந்தப் படம் சொல்ல நினைக்கும் விஷயத்தை சரியான விதத்தில் சொல்லாமல் ஹீரோவை பற்றி விவரிப்பதும் மற்றும் வில்லி கொடூரமானவர் என விவரிப்பதிலும் வீணடிக்கப்பட்டுள்ளது.
ஒரே அளவிலான நடிப்பை வெளிப்படுத்தும் ஹீரோ கவின்
ஹீரோ கவின் எல்லா காட்சிகளிலும் ஒரே அளவிலான நடிப்பை வெளிப்படுத்துவது சலிப்பை ஏற்படுத்துகிறது. தனது வழக்கமான நக்கலான மேனரிசம், அலட்டிக் கொள்ளாத உடல்மொழி போன்றவற்றை ஹீரோ கவின் இந்தப் படத்திலும் (Mask Movie Review) தொடர்கிறார். அது படத்திற்கு ஓரளவு கை கொடுத்த போதிலும் ருஹானியிடம் வழிவது, ஆண்ட்ரியாவை டீல் செய்வது, மாமனாரை உதாசீனப்படுத்துவது போன்றவை சலிப்பையே ஏற்படுத்துகிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!