ஹிப் ஹாப் ஆதி மீசைய முறுக்கு 2′ படத்தைப் பற்றி ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் வெளியிட்டுள்ளார். ‘மீசைய முறுக்கு’ படத்தின் முதல் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் (Meesaya Murukku 2) பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் படத்தைப் பற்றிய அறிவிப்பை ஹிப் ஹாப் ஆதி மலேசியாவில் தனது இசை நிகழ்ச்சி நடைபெற்ற மேடையிலேயே வெளியிட்டுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆதி பல்வேறு அடையாளங்களை வெற்றிகரமாக நிறுவிய நடிகர்
தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பின்னர் நடிகர், மற்றும் இயக்குநர் என பல்வேறு முத்திரைகளை பதித்தவர் ஹிப் ஹாப் ஆதி. இவரின் மீசைய முறுக்கு முதல் பாகம் உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட ஆதி – ஜீவா என்ற இரு நண்பர்களின் கதை ஆகும். இசை, நட்பு மற்றும் கனவுகளை மையமாகக் கொண்ட கதை ஆகும். அவரது அரை-உண்மைக்கதை அடிப்படையிலான பயணத்தை சித்தரித்த இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்று அவரை சிறந்த இயக்குநராகவும் மற்றும் நட்சத்திர நாயகனாகவும் உயர்த்தியது. தமிழ் இளைஞர்களிடையே ஹிப் ஹாப் ஆதி நகைச்சுவை மற்றும் இயல்பான நடிப்பால் மிகவும் பிரபலமானார். குறிப்பாக இளம் ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே இப்படம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுந்தர் சி – குஷ்பு தயாரிப்பில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்ற இப்படத்தின் இசை ஆல்பம் இன்றும் பிரபலமாக உள்ளது.
‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுந்தர் சி – குஷ்பு தம்பதியினரின் தயாரிப்பில் ‘மீசைய முறுக்கு 2’ படத்தில் ஆதி மற்றும் ஹர்சத் கானும் நண்பர்களாக இணைந்து நடித்து வருகின்றனர். ஆதி இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய அனைத்து முக்கிய பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். இப்படத்தின் கதை 2020-களின் பின்னணியில் தற்கால இசை-வாழ்க்கை சவால்களை மையப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. ஆதி மற்றும் ஹர்ஷத்தின் உண்மை நட்பு அடிப்படையில் உணர்ச்சிமிக்க காட்சிகள் நிறைந்து இருக்கும். முதல் பாக நடிகர்கள் நடிப்பதாகவும், மேலும் மூன்று ஹீரோயின்கள் நடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் ஆரவார வரவேற்பு (Meesaya Murukku 2)
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ‘மீசைய முறுக்கு 2’ அறிவிப்பு வெளியான உடனேயே தங்களது மகிழ்ச்சியையும் மற்றும் எதிர்பார்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். முதல் பாகத்தின் உணர்ச்சிபூர்வமான கதைசொல்லும் பாணியை ரசித்த ரசிகர்களுக்கு அதன் இரண்டாம் பாகம் எப்படி இருக்கும் என்ற ஆவல் அதிகரித்துள்ளது. ‘மீசைய முறுக்கு’ முதல் பாகம் போலவே, அதன் இரண்டாம் பாகமும் ஆதியின் தனிப்பட்ட பார்வையிலும் மற்றும் அனுபவங்களிலும் உருவாகும் ஒரு படமாக இருக்கும் என நம்பிக்கையோடு உள்ளனர்.
கோடை விடுமுறைக்கு வெளியிடூ
இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்புகள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கப்பட்டு முடிவடைந்து கோடை விடுமுறைக்கு வெளியாகும் என நம்பப்படுகிறது.