MHA Wartime Drill Order Tomorrow : அனைத்து மாநிலங்களிலும் நாளை போர்க்கால ஒத்திகையை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சகம் உத்தரவு
ஜம்மு காஷ்மீரின் பிரபலமான சுற்றுலாத்தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ‘தி ரெசிஸ்டன்ட் பிரன்ட்’ எனும் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது. மேலும் தொடர்ந்து பாகிஸ்தானுடன் எல்லையில் உரசல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் தக்க பதிலடி கொடுக்க இந்தியா தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில்தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நாளை மே 7-ம் தேதி போர்க்கால (MHA Wartime Drill Order Tomorrow) ஒத்திகையை நடத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் போர் ஒத்திகை (MHA Wartime Drill Order Tomorrow)
இந்தியாவில் உள்ள 259 இடங்களில் நாளை போர்க்கால ஒத்திகை நடக்கிறது. இந்த ஒத்திகையின்போது வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை அமைப்புகள் (சைரன்) சரியாக செயல்படுகிறதா என பரிசோதிக்கப்படும். மேலும் இந்திய விமானப்படையுடன் தொடர்பு கொள்ள தேவையான ‘ஹாட்லைன்’ மற்றும் ‘ரேடியோ இணைப்புகள்’ மற்றும் ‘கட்டுப்பாட்டு அறைகள்’ சரியாக செயல்படுகிறதா என்று சோதனை செய்யப்படவுள்ளது.
இதுமட்டுமல்லாமல் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் தற்காப்பு பயிற்சி அளித்தல் மற்றும் வான்வழி தாக்குதல் ஏற்படும் சமயத்தில் மின்சாரத்தை துண்டித்து எதிரிகளை குழப்புதல் போன்ற பயிற்சிகள் இந்த ஒத்திகையின்போது செய்து பார்க்கப்படும். மேலும் இந்தியாவின் முக்கிய ராணுவ உற்பத்தி மையங்களை மறைப்பது, தொழிற்சாலையை மறைப்பது அதாவது இரவு நேரங்களில் (MHA Wartime Drill Order Tomorrow) உண்மையான தொழிற்சாலையின் மின்சாரத்தை துண்டித்துவிட்டு, அதற்கு பதிலாக வேறு இடத்தில் தொழிற்சாலை இருப்பது போன்று பிரகாசமான விளக்குகளை எரிய விட்டு வான்வழி தாக்குதலின்போது குழப்பம் ஏற்பட்டு உண்மையான தொழிற்சாலை காப்பாற்றப்படும் உள்ளிட்ட பயிற்சிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
மாவட்ட, மாநில அளவில் விழிப்புணர்வு
போர் நடைபெறும் சமயங்களில் பேரிடர் மீட்பு துறை, தீயணைப்பு துறை போன்ற பாதுகாப்பு சேவைகள் சரியாக செயல்படுகிறதா என்றும், மக்களை அவசரமாக ஓரிடத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் (MHA Wartime Drill Order Tomorrow) எனில் சரியாக திட்டமிட்டபடி செய்யப்படுகிறதா என்றும் நாளை சோதனை செய்து பார்க்கப்படவுள்ளது. மேலும் போர் பற்றி மாவட்ட, மாநில அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தாக்குதலுக்கு எதிராக நாம் எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிந்துக்கொள்ள இந்த ஒத்திகை நடைபெறவிருக்கிறது.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!