Minimum Bank Balance Rules - வங்கிகளின் குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பான விதிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது
Canara Bank ஆனது 01, June 2025 முதல் தங்களது அனைத்து கிளைகளிலும் (Minimum bank balance rules) சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மிகவும் வசதியாக சேமிப்பு கணக்குகளுக்கான சராசரி மாதாந்திர இருப்பு (MAB) தேவையை முற்றிலுமாக விலக்கியுள்ளது. இதனால் கணக்குதாரர்கள் penalty கட்ட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவது இல்லை. SBI Bank-ம் இதே முறையைப் பின்பற்றுகிறது. SBI Bank-லும் கணக்குதாரர்கள் penalty கட்ட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவது இல்லை.
பிற வங்கிகளின் விதிமுறையின் மாற்றங்கள்(Minimum bank balance rules)
AXIS Bank தனது அனைத்து கிளைகளிலும் ரூ. 10,000-த்தை சராசரி மாதாந்திர இருப்பை பராமரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அப்படி ரூ. 10,000-த்தை சராசரி மாதாந்திர இருப்பு இல்லையெனில், கணக்கில் உள்ள குறைந்த இருப்பின் 6%- ஆனது (அதிகபட்சம் ரூ. 600) அபராதமாக விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
HDFC Bank தனது நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில் ரூ. 10,000-த்தையும், நடுப்புறத்தில் உள்ள கிளைகளில் ரூ. 5,000-த்தையும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கிளைகளில் ரூ. 2,500-த்தையும் குறைந்தபட்ச பராமரிப்பாக maintain பண்ண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அப்படி சராசரி மாதாந்திர இருப்பு இல்லையெனில் நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில் ரூ. 600 அபராதமும் மற்றும் அரை நகர்ப்புறங்களில் (Sub Urban) உள்ள கிளைகளில் ரூ. 300 அபராதமும் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ICICI-ன் நகர்ப்புற bank-களில் ரூ. 10,000-மும் மற்றும் கிராமப்புற bank-களில் ரூ. 5,000-மும் குறைந்தபட்ச பராமரிப்பு(Minimum bank balance rules) maintain பண்ண வேண்டும் அப்படி இல்லை என்றால் ரூ. 450 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
Punjab national Bank-ன் (PNB) மெட்ரோ கிளைகளில் ரூ. 10,000-த்தையும், நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில் ரூ. 5,000-த்தையும் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கிளைகளில் ரூ.1,000-த்தையும் குறைந்தபட்ச பராமரிப்பாக maintain பண்ண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. அப்படி இல்லை என்றால் ரூ. 450 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
IndusInd Bank, Kotak Mahindra Bank, Yes Bank மற்றும் DBS Bank போன்ற பிற தனியார் துறை கடன் வழங்கும் வங்கிகளும் வாடிக்கையாளர்களை குறைந்தபட்ச சராசரி இருப்பு ரூ.10,000-த்தை பராமரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.
Bank of Baroda-ன் நகர்ப்புறங்களில் உள்ள கிளைகளில் ரூ. 2,000-த்தையும், அரைநகர்ப்புறங்களில் (Sub Urban) உள்ள கிளைகளில் ரூ. 1,000-த்தையும் மற்றும் கிராமப்புறங்களில் ரூ. 500-த்தையும் குறைந்தபட்ச இருப்பாக பராமரிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. அப்படி இல்லையெனில் ரூ. 120 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது. HDFC மற்றும் AXIS வங்கிகளில் FD வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்ச இருப்பு விதிமுறை இல்லை என தெரிவித்துள்ளது. வங்கிகளின் விதிமுறைகள் எப்பொழுதும் மாறக்கூடியவை ஆகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!