Mirabai Chanu Wins Gold Medal In Commonwealth : காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் தங்கம் வென்றார் மீராபாய் சானு
குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் மணிப்பூரை சேர்ந்த 31 வயதான மீராபாய் சானு தங்கப் பதக்கம் (Mirabai Chanu Wins Gold Medal In Commonwealth) வென்றுள்ளார். நம் இந்தியாவின் பெருமையை சர்வதேச அளவில் தூக்கி நிறுத்திய மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு மீண்டும் தங்க வேட்டையை தொடங்கியிருக்கிறார். ஜப்பானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, கடைசியாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக் பளுதூக்குதல் போட்டியில் 4 வது இடம்பிடித்தார். பின்னர் அவருக்கு வலது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 1 வருடமாக எந்த சர்வதேசப் போட்டிகளிலும் அவர் கலந்து கொள்ளவில்லை.
மீண்டும் தங்க வேட்டையை தொடங்கிய மீராபாய் சானு
இந்நிலையில் காமன்வெல்த் பளுதூக்குதல் 48 கிலோ எடைப்பிரிவில் அவர் மீண்டும் கலந்து கொண்டார். இதில், மீராபாய் சானு எடையை நேரடியாக தலைக்கு மேல் தூக்கும் ‘ஸ்நாட்ச்’ முறையில் 84 கிலோ மற்றும் கழுத்துப் பகுதியில் நிறுத்திய பிறகு தலைக்கு மேல் தூக்கும் ‘க்ளீன் அண்ட் ஜெர்க்’ முறையில் 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி முதலிடம் பிடித்தார். இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நடைபெறும் 2026-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு அவர் (Mirabai Chanu Wins Gold Medal In Commonwealth) நேரடியாக தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தியாவின் சுனில் டால்வி 177 கிலோ எடையை தூக்கி வெள்ளி பதக்கத்தையும், நைஜீரியாவை சேர்ந்த ரூத் அசோகுவோ நியோங் 167 கிலோ எடையை தூக்கிவெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
வெற்றி குறித்து மீராபாய் சானு (Mirabai Chanu Wins Gold Medal In Commonwealth)
அகமதாபாத்தில் நடந்த இந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் நான் தங்கப் பதக்கம் வென்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு பிறகு 1 வருடம் கழித்து சொந்த மண்ணில் தங்கப் பதக்கம் வென்ற இந்த தருணம் இன்னும் சிறப்பானதாக்குகிறது. மேலும் ரசிகர்களின் ஆதரவு என்னை மிகவும் ஊக்கப்படுத்தியது. இந்த வெற்றியானது இடைவிடாத கடின உழைப்பு மற்றும் என்னுடைய பயிற்சியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் நாட்டின் தொடர்ச்சியான ஊக்கத்தின் விளைவாகும் என மீரா பாய் சானு தெரிவித்துள்ளார். மேலும் வரும் அக்டோபரில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப்பிற்கு நான் தயாராகி வரும் நிலையில் இந்த வெற்றி எனக்கு மேலும் நம்பிக்கையை அதிகரிக்கும் எனவும், சர்வதேச அரங்கில் நம் இந்தியாவை பெருமைப்படுத்த என்னால் முடிந்தை நான் தொடர்ந்து செய்வேன் என தெரிவித்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!