Mirai Review In Tamil : தேஜா சஜ்ஜா நடித்துள்ள மிராய் படத்தின் திரை விமர்சனம்
தமிழ் சினிமாவில் கிராமத்து கதைகள் அதிகம் ஹிட் அடித்து வரும் நிலையில், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சூப்பர் ஹீரோ படங்களும், ஃபேண்டஸி படங்களும் ரசிகர்களை கவர்ந்து பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பதிவு செய்து வருகின்றன. உதாரணமாக சமீபத்தில் மலையாளத்தில் வெளியான லோகா திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், இன்று இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி இயக்கத்தில், தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவான ‘மிராய்’ திரைப்படம் பான் இந்தியா வெற்றியை குறிவைத்து உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் (Mirai Review In Tamil) ரிலீஸ் ஆகியுள்ளது. மேலும் இந்திய திரையுல கில் சூப்பர் ஹீரோ படங்களுக்கான வரையறையை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேஜா சஜ்ஜா
தெலுங்கு சினிமாவில் குழந்தை பருவத்தில் இருந்தே பல படங்களில் நடித்து வரும் தேஜா சஜ்ஜா கடந்த 2021-ம் ஆண்டு வெளியான ‘ஜாம்பி ரெட்டி’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் அதே ஆண்டில் இஷ்க், அத்புதம் என வரிசையாக 3 முக்கிய படங்களில் ஹீரொவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 2024-ம் ஆண்டு வெளியான ‘ஹனுமான்’ திரைப்படம் தேஜா சஜ்ஜாவை ‘பான் இந்தியா’ ஹீரோவாக மாற்றியது. தெலுங்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ‘சூப்பர் ஹீரோ’ என்ற பட்டத்துடன் மிரட்டலான மிராய் படத்தில் நடித்து கலக்கியுள்ளார் தேஜா சஜ்ஜா.
மிராய் படம் எப்படி இருக்கு (Mirai Review In Tamil)
இந்திய திரைப்பட விமர்சகரும் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் டிராக்கருமான தரண் ஆதர்ஷ் மிராய் படத்திற்கு Engrossing என இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மிராய் படத்தின் கிராண்ட் விஷுவல்ஸ் மற்றும் சிஜி காட்சிகளின் துல்லியம் மெய்சிலிர்க்க வைப்பதாகவும், இயக்குநர் கார்த்திக் கட்டம்னேனி ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை மிராய் படத்தில் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபாஸ் கேமியோ
மிராய் படத்தின் ஓபனிங்கிலேயே பிரபாஸ் வாய்ஸ் ஓவரில் தான் படம் ஆரம்பிப்பதாகவும், அவரது காட்சி படத்தை பெரிய ‘பிளாக்பஸ்டர் ஹிட்’ ஆக்கிவிடும் என படத்தை பார்த்த நெட்டிசன்கள் பதிவிட்டு (Mirai Review In Tamil) வருகின்றனர். மேலும் அவருடைய ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். மற்றொரு நெட்டிசன் மிராய் படத்திற்கு ‘ரொம்ப ஹைப்புடன் போக வேண்டாம் எனவும், மிராய் படத்தின் முதல் பாதி தெறிக்க விடுவதாகவும், ஆனால், இரண்டாவது பாகம் கொஞ்சம் ஸ்லோவாகவும் தேவையில்லாத காட்சி அதிகமாக இருப்பதாகவும், ஆனால் படத்தின் கிளைமேக்ஸில் படக்குழுவினர் ஒரு வழியாக படத்தை கட்டிக் காப்பாத்தி முடித்துள்ளனர், அனால் எனக்கு மிராய் படத்தை விட ஹனுமான் படம் தான் ரொம்ப பிடித்திருந்தது. இந்த படத்தை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்’ என அந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்!
-
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.!
-
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்!
-
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம்
-
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்!
-
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
-
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.!
-
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?
-
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!