Gistak Media – Cinema News | Trending News | Latest News

Morning Wakeup Health Tips: கோடையில் காலையில் எழுந்தவுடன் இதை செய்யுங்கள்

நம்மில் நிறையபேர் காலையில் எழுந்ததும் குடிக்கும் முதல் பானம் காபி அல்லது டி யாகத்தான் இருக்கும். உண்மையில் வெறும் வயிற்றில் நாம் எந்த உணவை எடுத்துக்கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். வெறும் வயிற்றில் காபியோ அல்லது டீ எடுத்துக்கொள்வது நல்லதா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

இதிலுள்ள காபின் என்ற வேதிப்பொருள் உடல் நலத்திற்கு கேடு தரக்கூடியது. அதுமட்டுமின்றி இரவு முழுவதும் வெறும் வயிற்றில் இருந்து விட்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு நாம் சாப்பிடும் உணவானது நம்முடைய உடலுக்கு நன்மைத்தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதிலும் கோடை காலத்தைப் பொறுத்த வரையில் நிச்சயமாக காபி, டீ யை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை  தவிர்ப்பது  நல்லது.

நாம் காலையில் சாப்பிடும் உணவு அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக வைத்துக் கொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதாவது நம் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும் உணவாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த பதிவில் கோடைக்காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவு பொருட்களைத் தான் பார்க்கப்போகிறோம்.

Morning Wakeup Health Tips - தண்ணீர்

காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான சூடான தண்ணீரை அருந்துவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரட்சனை இருக்காது. முக்கியமாக உடலில் அங்கங்கு தேங்கி இருக்கும் கழிவுகள், நம் உடல் கழிவுகளினால் வெளியே வந்துவிடும். சருமமும் பொலிவாகும், உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்,  உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதுமட்டுமின்றி,  தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தை சமன் செய்து வயிற்றை சீராக இயங்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீரை குடித்து வரும்போது உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல் பருமன், சிறுநீரக கோளாறு போன்ற பிரட்சனைகளை தடுக்க உதவுகிறது. 

Morning Wakeup Health Tips - எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்கு அதிகரிக்க உதவுகிறது. மேலும் இதில் நிறைந்துள்ள பொட்டாசியம் நரம்புகள் மற்றும் மூளை வெகுவாக தூண்டுகிறது. சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது, இரத்த அழுத்தமும் கட்டுப்படுத்தப் படுகிறது, புற்றுநோய் வராமல் தடுக்கக் கூடியது, செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புகள் கரைவதோடு செரிமான அமிலத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும். மேலும் கல்லீரலில் உள்ள நொதிகளின்  ஆற்றல் அதிகரித்து கல்லீரலை வலிமையோடு வைத்து கொள்ளும், அதே சமயம் குடலின் இயக்கத்தை அதிகரித்து மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரட்சனைகள் ஏற்படுவதை தடுக்கும். இந்த எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரைய கூடிய நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவும் மேலும் இந்த பெக்டின் குடல் ஆரோக்கியதையும் மேம்படுத்தும்.

Morning Wakeup Health Tips - வெந்தயம்

முதல் நாள் இரவு 1 டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து அடுத்த நாள் காலையில் அப்படியே சாப்பிடவேண்டும். அதே போன்று வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 டீஸ்பூன் அளவு பொடியை தண்ணீரில் கலந்து குடித்து விடவேண்டும். இதனால் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் குறையும், உடல் சூட்டயும் குறைக்கும்,   இதில் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளதால் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறையும். இதிலுள்ள அமினோ அமிலம் இன்சுலின் உற்பத்தியை தூண்டும். இதில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரட்சனை நீங்குவதோடு, செரிமான பிரட்சனைகள், அல்சர் நீங்கும், உடலில் இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.  

Morning Wakeup Health Tips - நீர் ஆகாரம்

காலை எழுதவுடன் நீர் ஆகாரம் அருந்துவது என்பது இன்றும் கிராமப்புறங்களில் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் குளிர்ச்சியும், உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் களும் கிடைக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது. அது மட்டுமில்லாமல் உடலுக்கு அதிக சக்தியை தந்து நாள் முழுவதும் சோர்வின்றி உற்சாகமாக வேலை செய்ய உதவியாக இருக்கும். அன்றைய நாள் முழுவதும் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

Morning Wakeup Health Tips - தர்பூசணி

கோடைக் காலங்களில் காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணி பழத்தை சாப்பிடுவது மிகவும் நல்லது. காரணம் எலக்ட்ரோலைட் சமன் நிலையை மேம்படுத்துகிறது. இதில் 90 சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது குறிப்பிட தக்கது. மேலும் இது இயற்கையான சர்க்கரை மற்றும் குறைந்த கலோரிகளின் மூலமாகவும் உள்ளதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இதிலுள்ள அதிக அளவு லைகோபின் இதயம்  மற்றும் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மன நிலையை அதிகரிக்க உதவும்.

Morning Wakeup Health Tips - முளை கட்டிய பயிர்

முளைகட்டிய  பயிர்களில் வைட்டமின்கள், தாது உப்புகள், புரோட்டீன், என்சைம்ஸ், ஆன்டிஆக்சிடண்ட் போன்ற சத்துக்கள் நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். இதிலுள்ள ஆன்டிஆக்சிடண்ட் சூரிய கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்கும். அதே போன்று தோல் புற்று நோய் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை குறைக்கிறது. இதய நோயிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதேசமயம் வாயு தொல்லை இருப்பவர்கள் இவற்றை தவிர்ப்பது நல்லது.

Morning Wakeup Health Tips - தேன்

தேனை வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வர உடல் பலம் பெரும். இரத்தத்தை சுத்தம் செய்யும், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும், வயிறு எரிச்சலை குறைக்கும், செரிமானம் மேம்படுவதால் மலச்சிக்கல் இருக்காது, உடல் எடையும் குறையும், தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதையும் தடுக்கும். இதிலுள்ள ஃபிளேவனாய்டுகள், ஆன்டிஆக்சிடண்ட் இதய நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். இதிலுள்ள ஆன்டி பேக்டீரியல் தன்மை சருமத்தில் பேக்டீரியாக்களின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும். சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தை பெற உதவும்.

மேற்கூறிய அனைத்தும் கோடைக்காலத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் கோடைக்கால பிரட்சனைகள் ஒன்று கூட நம்மை பாதிக்காது. காபி, டீ என்பது உடல் சூட்டை அதிகரித்து அதுவே பல உடல் நல பிரட்சனைகள் ஏற்பட காரணமாகிவிடும். எனவே இந்த கோடையில் மேற்குறிய அனைத்தையும் சாப்பிட்டுவந்தாலே உடலின் பல பிரச்சனைகளை தடுக்க முடியும்.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top