Gistak Media – Cinema News | Trending News | Latest News

Motorola launches Moto E13: இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய Motorola Mobile

மோட்டோரோலா இந்தியா நிறுவனம் “Moto E13” என்ற என்ட்ரி – லெவல் ஸ்மார்ட் ஃபோனை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைலில் முக்கியமாக வெப் பிரவுசிங் செய்ய, கன்டென்ட்ஸ்களை பார்க்க, வாட்ஸ்அப் பயன்படுத்த உதவுகிறது. இந்த ஸ்மார்ட் ஃபோனை வைத்திருக்க விரும்பும் என்ட்ரி – லெவல் வாடிக்கையாளர்களுக்கு இந்த டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் octa – core UNISOC T606 SoC சிப்செட்டானது ஸ்மூத்தான யூஸர் எக்ஸ்பீரியன்ஸை வழங்க கொடுக்கப்பட்டுக்கது. இந்த சிப்செட் குறிப்பிட்ட இந்த செக்மென்டில் உள்ள மற்ற சிப்செட்ஸ்களுடன் ஒப்பிடும் பொது இது மிகவும் செயல்திறனை வழங்குவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மொபைலின் விலையானது குறைவு என்பதால் 5G போன்ற முக்கிய அம்சங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.

Moto E13 (Specifications) சிறப்பம்சங்கள் :-

Motorola launches Moto E13 - Platform Tamil

இந்த மொபைல் 60Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 20:9 ரேஷியோவுடன், 6.5 இன்ச் IPS LCD ஸ்கிரீனை கொண்டுள்ளது. இது ஏற்கனவே குறிப்பிட்டபடி ஆக்டா-கோர் UNISIC T606 ப்ராசஸர் மற்றும் 2GB அல்லது 4GB LPDDR4x RAM இந்த அம்சங்களுடன் வருகிறது. இந்த இரன்டு மாடல்களும் 64 GB ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. ஸ்டோரேஜை விரிவாக்கம் செய்வதற்கு மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் விரிவாக்கம் செய்துகொள்ளலாம். இது மற்ற மொபைல்களை போல் இல்லாமல் லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 13 ( Go Edition )-ஐ பெற்றுள்ளது. இந்த மொபைல் 5000m Ah மூலம் இயக்கப்படுகிறது. இந்த போன் டஸ்ட் & வாட்டர் ரெசிடென்சிகாக IP52 ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த மொபைல் 180 கிராம் கொண்டுள்ளது. இதில் டூயல் சிம்கார்டுகளை பயன்படுத்தலாம். இந்த மொபைலை பொறுத்தவரை பின்புற கேமரா 13 மெகாபிக்சல் பிரைமரி கேமராவும் மற்றும் முன்பக்கத்தில் 3 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. இந்த இரண்டு கேமராக்களும் 30fps முழு எச்டி வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவையாகும். இந்த Moto E13 மொபைல் போன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

மொபைலின் விலை:-

Moto E13 இந்த மொபிலில் 2GB RAM + 64 GB ஸ்டோரேஜ் மாடலானது ரூ. 6,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4GB RAM + 64 GB ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ. 7,999 ஆகும். இந்த ஸ்மார்ட் போனது 15-02-2023 முதல் Filpkart மற்றும் Jiomart கிடைக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Latest Slideshows

Scroll to Top