Gistak Media

Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்?

ஜி20 மாநாடு மற்றும் அணு ஆயுதத் தாக்குதல் போன்ற உலகளாவிய பதற்றங்களை மையமாகக் கொண்டு இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘மிஸ்டர் எக்ஸ்’ (Mr X Movie Review) திரைப்படம் ஏப்ரல் 17, 2026 அன்று வெளியாகியுள்ளது. ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் கூட்டணியில் இத்திரைப்படம் ஒரு ஸ்பை ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

வரலாற்றுப் பின்னணி கொண்ட கதைக்களம்

சர்வதேச அரசியல், அணு ஆயுதத் தாக்குதல் மற்றும் ஜி20 மாநாடு என சுவாரஸ்யமான கதைக்களத்தை இத்திரைப்படம் கொண்டுள்ளது. மிகவும் சுவாரஸ்யமான ஒரு வரலாற்றுப் பின்னணியுடன் இப்படம் தொடங்குகிறது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’ (RAW) அதிகாரியான பரமேஷ்வர் பிரதாப் (சரத்குமார்) 1964-ம் ஆண்டு அமெரிக்கா இந்தியாவின் இமயமலைப் பகுதியில் விட்டுச் சென்ற அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் அடங்கிய ஒரு பெட்டியை பல ஆண்டுகளாக இரகசியமாகப் பாதுகாத்து வருகிறார்.

இந்த சூழலில் 2026-ம் ஆண்டு அந்த பெட்டியை சரத்குமாரிடமிருந்து கைப்பற்றிய ரஷ்ய ராணுவம் அவரைச் சிறைபிடித்து மாஸ்கோவிற்கு அழைத்துச் செல்கிறது. ரஷ்ய ராணுவம் அந்த அணு ஆயுத மூலப்பொருளைப் பாகிஸ்தானுக்கு அனுப்ப திட்டமிடுகிறது. 

இந்த சமயத்தில், அணு ஆயுதத் தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக சென்னை மகாபலிபுரத்தில் நடைபெற்ற G20 மாநாட்டில் தகவல் கிடைக்கிறது. உடனடியாக ‘ரா’ அமைப்பின் உயர் அதிகாரியான மஞ்சு வாரியர், சரத்குமாரை மீட்கவும், மற்றும் அணு ஆயுதப் பெட்டியைக் கைப்பற்றித் தாக்குதலைத் தடுக்கவும் ஆர்யா தலைமையிலான குழுவை அனுப்புகிறார். இந்த இக்கட்டான ஆபத்தான சூழலில் யார் வெற்றி பெற்றார்கள் (Mr X Movie Review) என்பதே படத்தின் மீதிக்கதை.

நடிகர்களின் பெர்பார்மன்ஸ்

உளவாளி கதாபாத்திரத்தில் வரும் ஆர்யா 20 அடி ஆழ நீருக்குகீழ் உள்ள காட்சிகளில் ரிஸ்க் எடுத்து சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்யாவின் உணர்ச்சி வெளிப்பாடுகள் சுமாராக உள்ளது. கௌதம் கார்த்திக் வில்லன் ரோலில் ஃபிட்டான தோற்றத்துடன் நக்கல் சிரிப்பால் ரசிகர்களை அசத்துகிறார். ரா தலைவராக வரும் மஞ்சு வாரியர் ஆக்ஷனிலும் மற்றும் உரையாடல்களிலும் வலுவாக சிறந்து விளங்குகிறார். அதிகாரமான தோற்றத்துடன் இந்திய ரா உளவாளியாக வரும் சரத்குமார் சரத்குமார் தனது வழக்கமான முதிர்ச்சியான நடிப்பைத் தந்துள்ளார். அனகா, ரைசா வில்சன், அதுல்யா ரவி, ஜெயப்பிரகாஷ், மற்றும் காளி வெங்கட் ஆகியோர் சிறப்பாக நடிச்சிருக்காங்க.

Mr X Movie Review - GISTAK media

தொழில்நுட்பக் குழுவின் பெர்பார்மன்ஸ்

இத்திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே அதன் தொழில்நுட்பக் குழுவின் பெர்பார்மன்ஸ்தான். ஒரு சர்வதேசத் தரத்திலான ஸ்பை த்ரில்லரை கொடுக்க இயக்குநர் மனு ஆனந்த் சிறப்பாக முயற்சி செய்துள்ளார். ஸ்டண்ட் சிவா மற்றும் சில்வாவின் சண்டைக்காட்சிகள் அமைப்பு நேர்த்தியாக மற்றும் பிரம்மாண்டமாக உள்ளது. கடல், மலை, பாலைவனம் எனப் பல்வேறு லொகேஷன்களை ஒளிப்பதிவாளர் அருள் வின்சென்ட் மிக அழகாகவும், ஹாலிவுட் படங்களுக்கு இணையான தரத்திலும் படமாக்கியுள்ளார். திபு நினன் தாமஸின் பின்னணி இசை இத்திரைப்படத்திற்கு பெரும் பலத்தை சேர்த்துள்ளது (Mr X Movie Review). குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் பிரமாதமாக உள்ளது.

Mr X Movie Review : ஆக்ஷன் மற்றும் ஸ்பை த்ரில்லர் கொண்ட விருந்தாக Mr. X உள்ளது

சர்வதேச அரசியல், அணு ஆயுதத் தாக்குதல் மற்றும் ஜி20 மாநாடு என சுவாரஸ்யமான கதைக்களத்தை இயக்குநர் மனு ஆனந்த் தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பாகக் கையாண்டு ஒரு சர்வதேசத் தரத்திலான ஸ்பை த்ரில்லரை கொடுக்க முயற்சி செய்துள்ளார். இத்திரைப்படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாகவும், இரண்டாம் பாதி திணறலுடன் சற்று விறுவிறுப்பு குறைவாகவும் உள்ளது. மேலும் இத்திரைப்படம் சர்வதேச அரசியலைத் தொடுவதாகவும் அமைந்துள்ளது.   இத்திரைப்படத்தில் மிக பாதுகாப்பான இடங்களுக்குள் வில்லன்கள் எளிதாக நுழைவது போன்ற லாஜிக் மீறல் காட்சிகள் கேள்விகளை எழுப்புகின்றன.  இத்திரைப்படத்தில் உள்ள எதிர்பாராத பல திருப்பங்கள் படத்தின் விறுவிறுப்பை கூட்டுகின்றன. பழைய பாணியில் அமைந்துள்ள ஆர்யா – அதுல்யா இடையேயான அண்ணன்-தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் சற்று சலிப்பை ஏற்படுத்துகின்றன. மொத்தத்தில், ஒரு சில குறைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், ஆர்யாவின் பிரம்மாண்டமான மேக்கிங் மற்றும் கடின உழைப்பிற்காக ஒருமுறை ரசித்து பார்க்கத்தக்க சிறப்பான படமாக இருக்கிறது.

 

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top