ஐபிஎல் 2023க்காக சென்னையில் தரையிறங்கிய சிஎஸ்கே வீரர்கள்
ஐபிஎல் 2023க்காக சென்னையில் தரையிறங்கிய சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களிடமிருந்து மாபெரும் (CSK Captain MS Dhoni Lands in Chennai) வரவேற்பைப் பெற்றார். மேலும் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் சென்னைக்கு வந்தடைந்தனர்.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 16வது சீசனுக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) கேப்டன் எம்எஸ் தோனி நேற்று சென்னை வந்தடைந்தார் (MS Dhoni lands in Chennai). புகழ்பெற்ற ஐபிஎல் கேப்டனைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுக்காப்புடன் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தோனி உடனே தனது காரில் நுழைந்து டீம் ஹோட்டலுக்கு சென்றார். அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் பயிற்சி ஆட்டத்திற்காக சென்னை வந்துள்ளனர். சிவம் துபே, சேனாபதி, ரஹானே மேலும் அனைத்து வீரர்களும் சென்னையை வந்தடைந்துவிட்டனர்.
அனைத்து வீரர்களும் டீம் ஹோட்டலுக்கு வந்தடைந்தனர். அங்கு அவர்களை வரவேற்கும் விதமாக கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. தோனி மே 2022 முதல் போட்டி கிரிக்கெட்டில் இருந்து விலகி 10 மாத நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் இறங்குகிறார். ஐபிஎல் தொடரானது மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இதற்கான பயிற்சி ஆட்டம் இன்று முதல் சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது.








