Mushroom Benefits In Tamil : உணவில் காளானை கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள்...
Mushroom Benefits In Tamil : நம்முடைய உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உதவக்கூடிய உணவுகளில் காளான் சிறப்பான உணவு என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. இது நம்மில் நிறைய பேருக்கு தெரியாத ஒரு விஷயமாகும். அப்படிப்பட்ட காளானின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து முழுமையாக பார்ப்போம்.
காளானில் உள்ள சத்துக்கள் :
- காளான்கள் முதலில் அடிப்படையில் ஒரு பூஞ்சை வகையாகும்.
- காளான்களில் நார்ச்சத்து மிகவும் அதிகமாக இருக்கின்றது.
- அது மட்டும் அல்லாமல் காளான்களில் வைட்டமின் டி அதிக அளவு காணப்படுகிறது.
காளானின் பயன்கள் :
நம் உடல் எடை குறைப்பது என்பது கலோரி குறைந்த உணவுகளை சாப்பிட்டு டயட்டில் இருப்பதாகும். ஆனால் எடை இழப்பிற்கு காளான் எப்படி உதவுகிறது என்று அனைவருக்குமே ஒரு சந்தேகமாக இருக்கிறது. காளான்கள் மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒரு பொருளாகும். அது உடல் குறைப்பதற்கு மட்டுமல்லாமல் இன்னும் நிறைய மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது. இவை அடிப்படையில் பூஞ்சைகள் தாவர உலகத்தை சார்ந்ததாகும். காளான்களிலேயே நிறைய வகைகள் இருக்கின்றன. அதில் ஒரு சில வகைகள் மட்டுமே உண்ணக்கூடிய பண்பை பெற்றுள்ளன. நீங்கள் தினந்தோறும் உண்ணும் உணவில் காளான்களை சேர்ப்பதன் மூலம் உங்கள் எடையை எளிமையாக குறைக்கலாம். நொறுக்குத் தீனி முதல் நாம் உண்ணும் உணவு வரை அனைத்திலுமே காளான்களை இணைப்பது எளிதாகும்.
காளான்கள் புரதம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள். காளான்களின் ஊட்டச்சத்தில் உள்ள தனித்துவம் மற்றும் நிறைய ஆரோக்கிய நன்மைகள் மூலம் எடை இழப்பு எளிமையாகிறது. அவற்றில் உள்ள குறைந்த அளவு கலோரி எடை குறைப்பை நிகழ்த்த சிறந்த வழியாகும்.
Mushroom Benefits In Tamil :
Mushroom Benefits In Tamil - நார்ச்சத்து :
காளான்கள் நார்ச்சத்து மிகுந்த ஒரு உணவாகும். இது உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமல்லாமல் நம் வயிற்றை நீண்ட நேரத்திற்கு திருப்திகரமாக வைத்திருக்க உதவுகின்றன.
Mushroom Benefits In Tamil - குறைந்த அளவு கொழுப்பு தன்மை :
காளான்களில் மிகவும் குறைவான அளவில் கலோரி உள்ளது. மேலும் எடை குறைப்பு டயட்டில் சேர்க்க வேண்டிய முக்கியமான உணவுப் பொருளாக இது இருக்கிறது.
Mushroom Benefits In Tamil - குடல் ஆரோக்கியம் :
காளான்களில் ப்ரோ பயோடிக் என்னும் சிறப்பு பண்பும் உள்ளது. இது குடலின் ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்க உதவுகின்றன. இதனால் நல்ல செரிமானம் ஏற்பட்டு எடை இழப்புக்கு பெரிய அளவு உதவுகின்றது.
Mushroom Benefits In Tamil - இரத்த அழுத்தத்தை குறைக்கும் :
காளானில் தாது உப்புக்கள் மற்றும் விட்டமின் டி ஆகியவை நிறைந்துள்ளது. இது முக்கியமாக ரத்த அழுத்தத்தை குறைக்கின்றது. இதன் மூலம் இதய நோய்கள் வரும் அபாயத்தை இது குறைக்கின்றது.
Mushroom Benefits In Tamil - வைட்டமின் டி :
இன்று மக்களிடையே காணப்படும் பெரிதளவு பிரச்சனை என்றால் அது வைட்டமின் டி குறைபாடு தான். இது சூரியனிடம் இருந்து கிடைக்கும் வைட்டமின் ஆகும். இதனால்தான் மாலையில் சிறிது நேரம் வெயிலில் விளையாடுவது நல்லது என்று கூறுவார்கள். ஆனால் நாம் இப்போது பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் மூலம் வைட்டமின் டி பெரிதளவு அழிக்கப்படுகின்றது. ஆனால் இது போன்ற காளான்களை உண்பதன் மூலம் வைட்டமின் டி அளவை மேம்படுத்த உதவுகின்றது.
மேலும் சில ஆய்வுகளின் மூலம் காளான்கள் இதயம் மற்றும் நரம்பு ஆகியவற்றிற்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுகிறது. வளர்ச்சி மாற்ற குறைபாடுகளை இது ஒழுங்கு படுத்துகிறது. இதன் மூலம் எடை அதிகரிப்பை குறைத்து மனிதர்கள் சீரான வாழ்வை வாழ இது மிகவும் ஏற்ற உணவு பொருளாகும்.
Latest Slideshows
-
May Day History : மே தினம் உருவானது எப்படி? தோற்றம், முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டம்! -
Best Foods for Liver Health : கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சிறந்த 10 உணவுகள்.! -
SSC Jobs 2026 : எஸ்.எஸ்.சி குரூப் டி மற்றும் குரூப் சி பிரிவில் 731 பணியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
DC vs PBKS Highlights : டி20 கிரிக்கெட் வரலாற்றில் 265 ரன்களை சேஸ் செய்து வரலாறு படைத்தது பஞ்சாப்! -
Crude Oil Rates Today : இன்றைய கச்சா எண்ணெய் விலை நிலவரம் -
Kirni Fruit Benefits in Tamil : 'கிர்ணி' பழத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்! -
PGCIL Recruitment 2026 : மின்சாரத் துறையில் 660 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க! -
RCB vs DC IPL 2026 Highlights : பெங்களூரு அணியை வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ்.! -
Mr. X Movie Review : ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல் என சுவாரஸ்யமாக இருக்கிறதா மிஸ்டர் எக்ஸ்? -
Fun Facts About Fireflies : மின்மினிப் பூச்சிகள் பற்றிய வேடிக்கையான உண்மைகள்!