Gistak Media – Cinema News | Trending News | Latest News

Mustafizur Rahman : வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை நீக்க KKR அணிக்கு பிசிசிஐ உத்தரவு

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் மூன்று மாத காலங்களே உள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை (Mustafizur Rahman) நீக்கம் செய்ய வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான உறவில் பெரிய பாதிப்பு

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ராஜினாமாவுக்குப் பிறகு 2024 முதல் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் வலுக்கின்றன. வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிரான வன்முறை  தாக்குதல்கள் (Mustafizur Rahman) தொடர்கின்றன. இதில் இந்துக்கள் வசிக்கும் வீடுகள், வணிகங்கள் மற்றும் கோயில்கள் மீதான தாக்குதல்களும் அடங்கும். கடந்த சில வாரங்களாக வங்கதேசத்தில் இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருவதால் பதற்றமான அரசியல் சூழல் நிலவுகின்றது. இது இந்தியா மற்றும் வங்கதேசத்திற்கு இடையேயான உறவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச உறவுகள் காரணமாக ஏற்படும் விளைவுகளால் பாதிக்கப்படுவது என்பது எப்பொழுதும் பொதுவானது ஆகும்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வங்கதேச வீரர்

கடந்த டிசம்பர் 16-ம் தேதி  நடைபெற்ற 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை (Mustafizur Rahman) ரூ.9.20 கோடிக்கு வாங்கியது. ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வங்கதேச வீரர் என்ற பெருமையை இந்த ஐபிஎல் மினி ஏலத்தின் மூலம் முஸ்தஃபிசுர் ரஹ்மான் பெற்றுள்ளார். இவர் 2015 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2024 ஆம் ஆண்டில் விளையாடி நல்ல செயல்திறனை வெளிப்படுத்திய சிறந்த வீரர் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டில் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்றவர்.

Mustafizur Rahman - Gistakmedia

KKR அணியில் இருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானை நீக்க பிசிசிஐ முடிவு (Mustafizur Rahman)

தற்போது ஏற்பட்டுள்ள கலவரம் காரணமாக வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மானை  KKR அணியில் சேர்த்ததற்கு KKR அணி உரிமையாளரான நடிகர் ஷாருக்கானை (Shah Rukh Khan) பாஜக, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அரசியல் அமைப்புகள் கடுமையாக தாக்கி விமர்சித்து வருகின்றன. அதிகரித்து வரும் அரசியல் பதற்றம் காரணமாக BCCI செயலாளர் தேவஜித் சைகியா KKR அணியில் இருந்து முஸ்தஃபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். அவர் ஐபிஎலில் ஆடினால், அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், அவரை நீக்க பிசிசிஐ முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு மாற்றாக ஒரு வெளிநாட்டு வீரர் தேர்வு

இப்போது முஸ்தஃபிசுர் ரஹ்மானை நீக்கினால் KKR அணிக்கு அவர்கள் செலவழித்த ஏலத்தொகை ரூ 9.2 கோடி திருப்பித் தரப்படும் என்றும் KKR அணி இந்த தொகையை வைத்து மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ளலாம் என்று BCCI தெரிவித்துள்ளது. மேலும் வீரர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் தானாக விலகவில்லை (Mustafizur Rahman) என்றால், ஐபிஎல் ஒப்பந்த விதிப்படி, ரூ.9.20 கோடியை அவருக்கு வழங்க வேண்டி இருக்கும். இது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) எடுத்த ஒரு தீர்க்கமான முடிவு ஆகும். முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு மாற்றாக ஒரு வெளிநாட்டு வீரரை கொல்கத்தா அணி வாங்க முடிவு செய்துள்ளது. அந்த வீரர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே  பரவலாக எழுந்துள்ளது.

Latest Slideshows

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top